• கோயில்களை கையகப்படுத்தும் தமிழ்நாடு அரசு, சிறுபாண்மையினரை? – பிரதமர் மோடி கேள்வி..


கோயில்களை போன்று சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களையும், தமிழ்நாடு அரசு கையகப்படுத்துமா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானா மாநிலத்தில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக இடையே அங்கு கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் படிக்க..



  • அரசு ஊழியர்களுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்? இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு..


பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை மற்றும் அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. காலை 10.30 மணியளவில் தொடங்க உள்ள இந்த கூட்டத்தில், அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது. மேலும் படிக்க..



  • எதிரி நாடுகளை அலறவிடும் இந்தியா.. விமானப்படைக்கு புதியதாக 97 தேஜாஸ் போர் விமானங்களை வாங்க முடிவு..


இந்திய விமானப்படைக்கு புதியதாக 97 தேஜாஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான எல்லைப்பிரச்னை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இந்திய ராணுவம் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது. உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன. மேலும் படிக்க..



  • 41 கனடா தூதரக அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பும் இந்தியா? காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் விவகாரம் காரணமா?


கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியது. கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக கனட நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டே, உலக நாடுகள் முழுவதும் பரபரப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. மேலும் படிக்க..



  • பாஜக கூட்டணியில் சேர நாங்கள் ஒன்னும் பைத்தியம் இல்லை – பிரதமர் மோடியை வெளுத்து வாங்கிய கே.டி.ஆர்..


தென்மாநிலங்களை குறிவைத்து வேலை செய்து வரும் பாஜக, தெலங்கானாவில் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. ஆனால், இதுவரை அது பலன் அளித்ததாக தெரியவில்லை. வரும் மக்களவை தேர்தலில் வட மாநிலங்களில் சந்திக்கும் இழப்புகளை தென்மாநிலங்களில் ஈட்டும் வெற்றியின் மூலம் சரி கட்ட முயற்சித்து வருகிறது. மேலும் படிக்க..



  • தலைநகர் டெல்லியில் திடீர் நில அதிர்வு.. ரிக்டர் அள்வுகோலில் 4.6 ஆக பதிவு பீதியில் மக்கள்..


தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. நில அதிர்வால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் 6.2 என அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதால் அதன் அதிர்வலைகளால் டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.  மேலும் படிக்க..