- ”இஸ்ரேல்-ஹமாஸ் போரை தாண்டியும் பாலஸ்தீனியர்களின் கோரிக்கை நீடிக்கும்” - களத்தில் நின்றவரின் பேட்டி
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பாக காஸாவில் பாலஸ்தீனிய அதிகார சபைக்கான இந்தியாவின் முதல் பிரதிநிதியும், முன்னாள் தூதரக அதிகாரியுமான டிஎஸ் திருமூர்த்தி, ஏபிபி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதியும், தூதரக அதிகாரியுமான TS திருமூர்த்தி, 1996ம் ஆண்டு காஸாவில் உள்ள பாலஸ்தீன அதிகாரசபைக்கான இந்தியாவின் முதல் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். வளைகுடா மற்றும் அரபு நாடுகள் உடனான உறவை கையாள்வது உள்ளிட்ட வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார உறவுகளின் செயலாளராகவும் திருமூர்த்தி பணியாற்றியுள்ளார். மேலும் படிக்க..
- பக்தர்களே தயாரா? வரும் 16-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: நிகழ்ச்சி நிரல் என்ன?
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும். மேலும் படிக்க..
- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி! பதிவு சேவையில் மீண்டும் தமிழ் மொழியை தொடங்கிய இந்தியன் ஆயில் நிறுவனம்
இந்தியன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் மொழி நிறுத்தப்பட்டு இந்தி மொழி மட்டும் இடம்பெற்றிருந்தது சர்ச்சைக்கு வழிவகுத்தது. இந்நிலையில் மீண்டும் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது. IVRS சிஸ்டத்தில் மாநில மொழியை தேர்ந்தெடுக்கும் வசதியில் ஏற்பட்டிருந்த தடங்கல் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இந்தியாவின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனமான நாங்கள் நவம்பர் 1, 2023 முதல் ஏர்டெல்லிருந்து ஜியோவிற்கு மாறியதால் எங்கள் IVRS (இன்டர்ஆக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்) – 7718955555 சிஸ்டத்தில் மாநில மொழி தேர்வு வசதியில் சிறு தடங்கல் ஏற்பட்டது என்பதை எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் படிக்க..
- மக்களவை தேர்தலுக்கு முன்பாக மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? உச்ச நீதிமன்றம் பரபர பதில்
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவிகிதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் மசோதாவை நிறைவேற்ற பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவகவுடா தொடங்கி வாஜ்பாய், மன்மோகன் சிங் வரையில் பலரின் ஆட்சி காலத்தில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கடந்த 2010ஆம் ஆண்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றியது. மாநிலங்களவையில் நிறைவேற்றினாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், அதை மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. மேலும் படிக்க..
- சத்தீஸ்கரில் அடுத்த முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
பாஜகவின் கோட்டையாக இருந்த சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம்தான் சத்தீஸ்கர். மாநில மக்கள் தொகையில் 30 சதவிகிதத்தினர், பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள். மாநிலம் உருவாக்கப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்றது. மேலும் படிக்க..