தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (நவம்பர் 5) ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 


நெருங்கும் தீபாவளி பண்டிகை 


நாடு முழுவது  அனைத்து தரப்பு மக்களாலும் சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று “தீபாவளி’. நடப்பாண்டு இந்த பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடைவீதிகளில் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் முதல் பாதியிலிலே பண்டிகை வருவதால் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 


ரேஷன் கடைகள் இயங்கும் 


அதன்படி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) தீபாவளி பண்டிகை வரும் நிலையில், அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான நவம்பர் 5ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் இயங்குகிறது. மேலும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பொருட்களை மக்கள் முன்கூட்டியே வாங்குவார்கள் என்பதால் தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே மக்கள் இன்றைய நாளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்கி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.