• முடிவுக்கு வந்த உலகக்கோப்பை திருவிழா - இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் 


கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இதில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. வெற்றி பெற்ற அந்த அணிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க



  • கொண்டாட்டத்தை தவறவிட்ட இந்தியா - பிரதமர், முதல்வர், அரசியல் தலைவர்களின் ரியாக்‌ஷன்ஸ் என்ன?


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணிக்கு ஒட்டுமொத்த இந்திய தேசமும் ஆறுதல் தெரிவித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரதமர் மோடி, ராகுல் காந்தி , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், யோகி ஆதித்யநாத், உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் இந்திய அணிக்கு ஆறுதல் தெரிவித்து உற்சாகம் அளிக்கும் வார்த்தைகளை பதிவிட்டுள்ளனர். மேலும் படிக்க




  • விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து.. எரிந்து நாசமான 40க்கும் மேற்பட்ட படகுகள்..!




விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமாகின.படகுகளில் இருந்த எல்பிஜி சிலிண்டர்கள் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டதாக மீனவர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான சரியான காரணம்  குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க



  • இன்று தமிழகத்தில் மழை இருக்கு... எங்கெல்லாம்? எவ்வளவு நேரம் - இன்றைய வானிலை?


கடந்த அக்டோபர் மாதம் முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழலே நிலவுவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் படிக்க



  • சபரிமலையில் மண்டல பூஜை இன்று தொடங்குகிறது ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு - எப்படி பெறுவது?


சபரிமலையில் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜை தரிசனத்திற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.https://sabarimalaonline.org/#/login என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும், பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளன. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக 13 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க