விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமாகின. ஒரு படகில் இருந்து பரவிய தீ, அடுத்தடுத்து மற்ற படகுகளுக்கு பரவி பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியது. 


இந்த தீ விபத்திற்கு முக்கிய காரணம் படகுகளில் இருந்த எல்பிஜி சிலிண்டர்கள் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டதாக மீனவர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 






எனினும் தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீயை கட்டுக்குள் கொண்டு வர நான்குக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், இதுவரை உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் காவல்துறை துணை ஆணையர் கே ஆனந்த் ரெட்டி தெரிவித்தார்.






இந்த தீ விபத்தில் சுமார் 40 மீன்பிடி படகுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், ஒவ்வொரு படகுக்கும் குறைந்தது 40 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். தீயை கட்டுக்குள் கொண்டு வந்தவுடன் தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும் என காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.


இதுகுறித்து அமர் என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார். அதில், “நேற்றிரவு, விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தீ விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக இந்த பெரிய தீ விபத்தில் 30 முதல் 38 படகுகளை எரித்தது என்று அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.






அதிர்ஷ்டவசமாக, எந்த உயிரிழப்பும் இல்லை, ஆனால் என் எண்ணங்கள் பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் உள்ளன. இச்சம்பவத்தால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.” என பதிவிட்டு இருந்தார்.