- 5 State Election: மத்தியபிரதேசம், சத்தீஸ்கரில் தொடங்கியது வாக்குப்பதிவு - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
இன்று சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளில் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், யாரும் எதிர்பாராத விதமாக 78 சதவிகித வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 70 தொகுதிகளில் ந்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- Savings Bond For Girl Child : பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு.. ஜாக்பாட்.. அதிரடி பிளானுடன் களமிறங்கிய பாஜக..
பாஜக அதிக கவனம் செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தான் உள்ளது. 25 மக்களவை தொகுதிகள் அங்கிருப்பதால், மத்தியில் ஆட்சி அமைக்க இந்த தொகுதிகளில் வெற்றிபெறுவது அவசியம். கடந்த 2014ஆம் ஆண்டிலும் சரி, 2019ஆம் ஆண்டிலும் சரி, ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்தது. சட்டப்பேரவை தேர்தல்களை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி அங்கு ஆட்சியை தக்க வைத்ததாக சரித்திரம் இல்லை. மேலும் படிக்க
- ‘மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் மதிப்பது’ - பிரிட்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர், உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட முக்கியமான கட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அரசுமுறை பயணமாக பிரட்டன் சென்றுள்ளார். ராயல் ஓவர்-சீஸ் லீக் கிளப் சார்பாக லண்டனில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், 'இந்தியர்கள், உலகை எப்படி பார்க்கிறார்கள்' என தலைப்பில் பேசினார். மேலும் படிக்க
- Israel Hamas Gaza : "அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தவிர்க்க வேண்டும்" காசா விவகாரத்தில் வலியுறுத்தும் இந்தியா
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் நடந்து வரும் போர், உலக நாடுகளை நெருக்கடியில் தள்ளியுள்ளது. உலக அமைதிக்கு பெரும் சவாலாக மாறியுள்ள இஸ்ரேல் போரால் பாலஸ்தீன காசா பகுதியில் இதுவரை, 11,320 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 4,650 குழந்தைகளும் 3,145 பெண்களும் அடங்குவர். ஒருபுறத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகளும் ஐநாவும் வலியுறுத்தி வரும் நிலையில், போர் நடக்கும் பகுதியில் அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்ல போரை ஒத்திவைக்க வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும் படிக்க
- பாஜகவுக்கு பை பை சொன்ன விஜயசாந்தி.. சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் அதிரடி
ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசம், ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, அம்மாநில அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புது கட்சி தொடங்கினார். இதனால், இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் பலவீனம் அடைந்தது. ஆந்திரா பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறி கொடுக்க, தெலுங்கு தேசம் கட்சி அங்கு ஆட்சியை பிடித்தது. மேலும் படிக்க