• 27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலக அழகி 2023 போட்டி...  


மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் 71வது உலக அழகிப் போட்டி இந்த வருடம் இந்தியாவில் நடைபெறும் என மிஸ் வேர்ல்ட் அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூலியா மோர்லி  தெரிவித்துள்ளார். கடைசியாக 1996 ஆம் ஆண்டு இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடந்தது. 27 ஆண்டுகளுக்குப் பின் நடக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவரை மிஸ் வேர்ல்டு பட்டத்தை இந்தியாவிலிருந்து 6 பேர் பெற்றுள்ளனர். மேலும் படிக்க



  • 300 அடி ஆழ போர்வெல் துளை.. 3 நாட்கள் போராட்டம் வீண்.. இரண்டரை வயது குழந்தை சடலமாக மீட்பு..!


மத்திய பிரதேசத்தில் 3 நாட்களாக நடைபெற்ற மீட்பு பணிகளுக்கு பிறகு மீட்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 நாட்கள் போராடி சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட பெண் குழந்தை ஸ்ருஷ்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த  சம்பவம் அப்பகுதி மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க



  • கண்டம் விட்டு கண்டம் பாயும் ’அக்னி பிரைம்' ஏவுகணை.. 2000 கிமீ தொலைவு செல்லும் சோதனை வெற்றி..


புதிய தலைமுறை பாலிஸ்டிக் ஏவுகணையான ‘அக்னி பிரைம்’ நேற்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய தலைமுறை பாலிஸ்டிக் ஏவுகணையை ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் சோதனை செய்யப்பட்டது.  இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது. அக்னி ஏவுகணை இந்திய ரணுவத்தில் சேர்க்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.  மேலும் படிக்க



  •  “ராகுல் காந்தி வெளிநாடு செல்லும்போதெல்லாம் இதே வேலை..” - அமைச்சர் ஜெய்சங்கர் காட்டம்


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டில் சென்று பேசுவது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாக பதிலளித்துள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு அவர் பதிலளித்தபோது, ”ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் நாட்டை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.  இந்தியாவில் அவர் என்ன செய்கிறார் என்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் அதை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதால் இந்தியாவுக்கு பலனில்லை” என  தெரிவித்துள்ளார். மேலும் படிக்க




  • அதிதீவிர புயலாக வலுப்பெற்ற ‘பிபர்ஜாய்’.. உடனடியாக மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்




தென் கிழக்கு அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் அதிவேகமாக காற்று வீசக்கூடும்.  எனவே அரபிக்கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் படிக்க