தமிழ்நாடு:



  • வீடுகளுக்கு மின்கட்டண உயர்வு இல்லை என்றும், இலவச மின்சாரம் தொடரும் என்றும் தமிழ்நாடு அரசு திட்டவட்டம் 

  • தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் இருப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தான் காரணம் - அமைச்சர் பொன்முடி 

  • தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் தலை நிமிர்ந்து, கம்பீரமாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

  • அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இன்று ஒத்திவைப்பு 

  • சென்னை ஸ்டான்லி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடர்ந்து செயல்பட மத்திய அரசு அனுமதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

  • குன்னூர்-மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் நீலகிரி மலை ரெயில் தடம் புரண்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி 

  • தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தன்னை துன்புறுத்தியதாக சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி மீது ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் குற்றச்சாட்டு

  • கோடை மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுற்கு கோரிக்கை

  • தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்று தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 


இந்தியா:




  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்கள் வெல்லும் என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நம்பிக்கை 



  • இந்திரா காந்தி படுகொலையை சித்தரிக்கும் காட்சிகளைக் கொண்ட ஊர்தியுடன் கனடாவில் சீக்கியர்கள் நடத்திய பேரணியால் அதிர்ச்சி

  • நடப்பாண்டில் இந்தியாவில் 50 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி - இதனால் 8,195 இடங்கள் உயர்ந்துள்ளதாக தகவல் 

  • இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக அறிவிப்பு

  • கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது 

  • கர்நாடகாவில் இந்த கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா அறிவிப்பு 

  • தீவிரமடையும் 'பிபர்ஜாய்' புயலால் கர்நாடகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

  • மத்திய பிரதேசத்தில் போர்வெல் துளை விழுந்த குழந்தை சடலமாக மீட்பு - சோகத்தில் மக்கள்

  • கண்டம் விட்டு கண்டம் பாயும் ’அக்னி பிரைம்' ஏவுகணை சோதனை வெற்றி - பாதுகாப்பு அமைச்சகம் தகவல் 


உலகம்:



  • போப் ஆண்டவருக்கு வெற்றிகரமாக   நடந்த அறுவை சிகிச்சை - ஜூன் 18ஆம் தேதி வரை சந்திப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு 

  • இங்கிலாந்தில் முக்கிய இடங்களில் இருக்கும் சீன கண்காணிப்பு கேமராக்களை அகற்றுவதற்கான மசோதா விரைவில் தாக்கல் 

  • செர்பியாவில் உள்ள முதலாம் உலகப்போரில் உயிரிழந்த அடையாளம் தெரியாத ராணுவ வீரரின் நினைவிடத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மரியாதை

  • ஆப்கானிஸ்தானில் மசூதி அருகே நடந்த வெடி விபத்தில் 11 பேர் பலி 

  • சோமாலியாவில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி தாக்குதல் 20 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 


விளையாட்டு:



  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில்  469 ரன்களுக்கு  ஆல் -அவுட் - இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து திணறல் 

  • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் செக்குடியரசு வீராங்கனை முச்சோவா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் 

  • மாநில கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி அரைஇறுதிக்கு தகுதிப் பெற்றது

  • பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம் 

  • ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டித்தொடர் -  15 பதக்கங்களுடன் பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்தியா