Airlines :  இன்டிகோ விமானத்தில் திடீரென அவசர கதவை திறந்த பயணியால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Continues below advertisement

சமீபகாலமாகவே விமானத்தில் நடக்கும் சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

நடுவானில் பரபரப்பு

Continues below advertisement

டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று காலை 6E 308 என்ற இண்டிகோ விமானப் புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அதில் 40 வயதுடைய ஒரு பயணி மதுபோதையில் இருந்துள்ளார்.  பின்னர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது, அனைவரும் தூக்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து அந்த நபர் தனது இருக்கையில் இருந்து எழுந்து கழிவறைக்கு சென்றுள்ளார்.

பின்னர், விமானத்தின் அவசர கதவை (Emergency Door) திறக்க முயன்றார். இதனை பார்த்த விமானப் பணிப்பெண்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்து அவரை இருக்கையில் அமர வேண்டும் என கூறினர். இதனை அடுத்து, பெங்களூரு விமான நிலையம் வந்தவுடன், சிஐஎஸ்எஃப் துணை ராணுவப் படையினரிடம் அந்தப் பயணியை ஒப்படைத்தனர்.  இவர் உத்தர பிரதேசம் கான்பூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.  நடுவானில் அவசர கதவை திறந்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மற்றொரு சம்பவம்

இந்தியாவில் விமானங்கள் பறக்கும்போது அவசர கதவை திறக்க முயலும் சம்பவங்கள் புதிதல்ல. இதற்கு முன்பு சுமார் இரண்டு முறை இந்த விபரீத செயல்கள் நடந்திருக்கிறது. இந்த ஒரு சம்பவம் மட்டுமல்லாமல் இதுபோன்ற அநாகரீகங்கள் இந்தியாவுக்கு வரும் விமானங்களில் அதிகம் நடக்கின்றன.

சில தினங்களுக்கு முன்பு கூட  தாய்லாந்தில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் போதையில் விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல, அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதனை அடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண், விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட மற்றொரு சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம், ஜனவரி 30ஆம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க

India Corona Update : நாளுக்கு நாள் உயரும் பாதிப்பு எண்ணிக்கை.. 2-ஆம் நாளாக 6000-ம் பேருக்கு உறுதியான கொரோனா தொற்று..

PM Modi Visit Chennai: பிரதமர் மோடி இன்று சென்னை வருகை.. 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு.. ஏற்பாடுகள் தீவிரம்..