Elements : ஜம்மு காஷ்மீரை  தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தில் 15 அரிய வகை கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


லித்தியம்


நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுரங்க அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. லித்தியம் மட்டுமின்றி இரும்பு அல்லாத உலோகம், தங்கம் உட்பட 51 வகையான கனிமங்கள் இருக்கும் இடங்களையும் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  


பூமிக்கு அடியில் 59 லட்சம் டன் வரை லித்தியம் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. லித்தியம் உள்ளிட்ட தங்கம் இருக்கும் 51 இடங்களைக் கண்டறிந்து அவை குறித்த விவரங்கள் அந்தந்த மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டுள்ளது.


இந்த 51 தாதுக்கள் சுரங்கத்தில், 5 சுரங்கங்களில் தங்கம் இருக்கிறது. மற்ற சுரங்கங்களில் பொட்டாசியம், மாலிப்டேனம் உள்ளிட்ட பல்வேறு உலோகங்கள் தமிழகம், ராஜஸ்தான், ஒடிசா, கர்நாடகா, ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்களில் இந்த 51 சுரங்கங்கள் உள்ளன. 


ஆந்திராவில் கண்டுபிடிப்பு


இதனை தொடர்ந்து தற்போது ஆந்திராவில் 15 வகை கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (NGRI) என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பாகும்.  இந்த அமைப்பு தற்போது  ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் 15 அரிய கனிமங்களின் மிகப்பெரிய இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகள் அனந்தபூரியில் பாரம்பரியமற்ற பாறைகளை தேடும் ஒரு கணக்கெடுப்பை நடத்தினர். இதில் தான் 15 அரிய கனிமங்களின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. 


அரிய கனிமங்கள்:


இந்த ஆய்வில் முக்கியமாக அரிய கனிமங்கள் (Rare earth elements) என அறியப்படும் சிர்கோனியம், ஸ்காண்டியம், ஹஃப்னியம், டான்டலம், நியோபியம், நியோடைமியம், பிரசியோடைமியம், சீரியம், லாந்தனம், யட்ரியம், தோரைட், மோனாசைட் ஆகிய உலோகங்கள் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, செல்போன்கள், தொலைக்காட்சிகள், கணினிகள், உட்பட பல எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் கூறுகளில் ஒன்றாக லாந்தனைடின் அரிய கனிமங்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.


இது பற்றி மூத்த விஞ்ஞாணி கூறுகையில், ”தற்போது கண்டறியப்பட்ட 15 கனிமங்கள் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் கூறுகளில் ஒன்றாக இவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கனிமங்கள் வரவிருக்கும் காலக்கட்டத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அன்றாட வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் இந்த கனிமங்கள் இருப்பது மிகவும் நல்லது. தற்போது கண்டறியப்பட்ட இந்த கனிமங்களை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.




மேலும் படிக்க


Twitter : டிவிட்டரில் புதிய வெரிஃபிகேசன் கொள்கைகள் அமல்; என்னென்ன மாற்றங்கள்; இதைப் படிங்க!


PM Modi Visit Chennai: பிரதமர் மோடி இன்று சென்னை வருகை.. 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு.. ஏற்பாடுகள் தீவிரம்..


SalmanKhan Bullet Proof Car: அடுத்தடுத்து கொலை மிரட்டல்.. சொகுசான புல்லட் ஃப்ரூப் காரை வாங்கிய நடிகர் சல்மான் கான்