தமிழ்நாடு: 



  • தமிழ்நாட்டில் ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களை சென்னையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 

  • சென்னை விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி - தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக பெருமிதம் 

  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி 

  • தமிழ் மக்களையும், கலாச்சாரத்தையும் மிகவும் நேசிப்பதாக ராமகிருஷ்ணா மடத்தில் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு 

  • கூட்டாட்சி இருக்க வேண்டுமெனில் மாநில சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் - பிரதமர் மோடி முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு 

  • சென்னை - மதுரை இடையே வந்தே பாரத் ரயில் சேவை வேண்டும்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை - பரந்தூர், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்க கோரிக்கை 

  • பிரதமரின் சென்னை வருகை , புறப்படும் நிகழ்வுகளில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் - தனித்தனியாக சந்தித்துப் பேச அனுமதி கேட்ட நிலையில் தரப்படாததால் ஏமாற்றம் 

  • பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகைக்கு எதிர்ப்பு - சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் 

  • சென்னையில் இருந்து கோவை சென்ற வந்தே பாரத் ரயிலில் 2 பாஜக, 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பயணம் 

  • தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு இன்று செல்லும் பிரதமர் மோடி - ஆஸ்கர் வென்ற ஆவணப்படத்தில் இடம் பெற்ற பொம்மன்,பெள்ளி தம்பதியினரை சந்திக்கிறார் 

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழுத்தத்தால் தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

  • நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கான ஏலப்பட்டியலில் இருந்து தமிழ்நாட்டின் பகுதிகள் நீக்கம் - மத்திய அமைச்சருக்கு பிரகலாத் ஜோஷிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி 

  • ஜாக்டோ-ஜியோ அறிவித்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு 

  • ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததால் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் வாபஸ் 

  • செங்கல்பட்டு ஆத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தகராறு 

  • திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவிகள் மீது கொடூர தாக்குதல் - போதைக் கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது 

  • நீலகிரியில் 12 ஆம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்க உதவியதாக புகார் - 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்


இந்தியா:



  • முதல்முறையாக சுகோய் போர் விமானத்தில் பறந்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு  - தெஸ்பூர் விமான தளத்தில் இருந்து துணிச்சல் பயணம் 

  • நாடு முழுவதும் ஈஸ்டர் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை 

  • திருப்பதியில் இலவச தரிசனத்திற்காக 50 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு  - தொடர் விடுமுறையால் அலைமோதும் கூட்டம் 

  • இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அடுத்த சில மாதங்களுக்கு தொடரும் -முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

  • தெலங்கானாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - வரவேற்பு நிகழ்ச்சியிலும், திட்டங்கள் தொடக்க விழாவிலும் பங்கேற்காமல் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணிப்பு 

  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை அமெரிக்க பயணம் - உலக நிதிக்குழு, சர்வதேச நாணய நிதி கூட்டங்களில் பங்கேற்பு


உலகம்:



  • நைஜீரியாவின் உமோகிடி என்ற கிராமத்தில் நுழைந்து மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு -  50 பேர் உயிரிழப்பு 

  • மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனையை நடத்திய வடகொரியா  

  • வங்கதேசத்தில் இருதரப்பினரிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழப்பு 

  • தைவானை சுற்றி போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சீனா - இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரிப்பு 

  • மே 6 ஆம் தேதி நடக்கும் இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முடி சூட்டு விழாவில் பங்கேற்க இந்திய வம்சாவளி பெண் சமையல் கலைஞர் மஞ்சு மாலிக்கு அழைப்பு 


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வி 

  • ஐபிஎல் தொடர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வி 

  • பெரம்பலூரில் நடைபெற்ற தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் போட்டி:  கர்நாடகா, ராஜஸ்தான் அணிகள் சாம்பியன்  

  • ஒலிம்பிக் தகுதிச்சுற்று கால்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்