• பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணையும் எதிர்க்கட்சி தலைவர்கள்... ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் கூட்டம்...


எதிர்க்கட்சி தலைவர்களின் மெகா கூட்டம் ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜகவை வீழ்த்த பல்வேறு கட்சிகள் வியூகம் அமைத்து வரும் நிலையில், 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள்  தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்க உள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க



  • பிஎஸ்என்எல்-லில் 4ஜி/5 ஜி சேவை.. அலைக்கற்றையை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்


தொலைதொடர்பு துறையில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு, 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றைகளை ஒதுக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட 89 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  ஈக்விட்டி இன்ஃப்யூசன் மூலம் இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்க




  • ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து... நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஏறியதில் 4 பேர் உயிரிழப்பு..!




288 பேரின் உயிரை பலி வாங்கிய ஒடிசா ரயில் விபத்து பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய சோகம் இன்னும் மறையாத நிலையில், மீண்டும் அங்கு விபத்து நடந்துள்ளது. ஜாஜ்பூர் ரோடு ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டிகள்  நின்றுகொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மழை பெய்த நிலையில் ரயில் பெட்டிகளுக்கு அடியில் தொழிலாளர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது ரயில் கிளம்பியதால் இந்த சோக சம்பவம் நடந்தேறியுள்ளது. மேலும் படிக்க



  • 35 ராணுவ வீரர்களுக்கு வாந்தி மயக்கம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.. காரணம் என்ன?


கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சியில் கலந்து கொண்ட 35க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஜூன் 7ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உணவு கெட்டுப்போனதை தெரியாமல் உட்கொண்டுள்ளனர் என  சக்லேஷ்பூர் எம்.எல்.ஏ சிமென்ட் மஞ்சு தெரிவித்துள்ளார். வீரர்கள் அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர் என்றும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மணிப்பூர் கலவரம்...  8 வயது சிறுமி உட்பட 3 பேர் எரித்து படுகொலை...!


மணிப்பூர் மாநிலம் இம்பாலில் 8 வயது சிறுமி உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸிலேயே வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுமி, அவரது தாய் மற்றும் அவரது உறவினர் ஆகிய 3 பேரும் ஃபாயெங்கில் இருந்து இம்பால் மேற்கு நோக்கி ஆம்புலன்ஸில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது  கும்பல் ஒன்று ஆம்புலன்ஸ்க்கு தீ வைத்துள்ளது. இதில் ஆம்புலன்ஸில் இருந்த மூன்று பேரும் உடல்  கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் படிக்க