கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சியில் கலந்து கொண்ட 35க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஜூன் 7ஆம் தேதி கெட்டுப்போன உணவினை சாப்பிட்டதால் சக்லேஷ்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இந்த விவகாரம் தொடர்பாக, சக்லேஷ்பூர் எம்.எல்.ஏ சிமென்ட் மஞ்சு கூறுகையில், குடுகரஹள்ளியில் உள்ள ராணுவ முகாமில் ஓட்டுநர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் செவ்வாய்க்கிழமை இரவு உணவுக்குப் பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.


க்ராஃபோர்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை மஞ்சு சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். சுமார் 100 பேர் உணவை சாப்பிட்டதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்“ மேலும், ”அவர்கள் இரவு உணவிற்கு அரிசி, பருப்பு மற்றும் பன்னீர் சாப்பிட்டார்கள். அவர்கள் உணவு கெட்டுப்போனதை தெரியாமல் உட்கொண்டுள்ளனர்'' என்றார்.


37 வீரர்கள் உணவு சாப்பிட்ட பிறகு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக புகார் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மஞ்சு கூறினார். “அவர்கள் நன்றாக குணமடைந்து வருகிறார்கள். மேலும் அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர்,'' என்றார்.


தாலுகாவைச் சேர்ந்த அதிகாரிகள் பயிற்சி முகாமை பார்வையிட்டு, உணவு கெட்டுப்போனதற்கான காரணத்தை மதிப்பிடுவதற்காக உணவு மாதிரிகளை சேகரித்தனர், மஞ்சு கூறினார்.


உள்ளூர் தகவல்களின்படி, மொத்தம் 42 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் மற்றும் அவர்களில் 21 பேர் வெளியேற்றப்பட்டனர். மீதமுள்ள வீரர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.