“நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா” - மாநில அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை 


இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா  அனைத்து மாநில, யூனியன் பிரதேச அமைச்சர்களுடன்  இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். மேலும் படிக்க


   “ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாஜக போராடுகிறது” - பிரதமர் மோடி பேச்சு 


பாஜக நிறுவன தினத்தையொட்டி  டெல்லியில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சமூக நீதியை காப்பதுபோல எதிர்க்கட்சிகள் நாடகம் ஆடுகிறது” என குற்றம் சாட்டினார். மேலும் பாஜகவின் தாரக மந்திரமே தேசத்தின் வளர்ச்சி தான். பாஜக எப்போதும் ஓட்டு வங்கி அரசியலை விரும்புவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் படிக்க


   “வடகிழக்கு மாநிலங்களை கைகழுவிய நேரு..” : காங்கிரஸை தாக்கிப்பேசிய நிர்மலா சீதாராமன்..!


இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன ராணுவ நுழைந்து ஆக்கிரமித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பிரதமர் மோடி அமைதி காப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் முதல் பிரதமர் நேரு வடகிழக்கு பிராந்தியத்தை கைகழுவிவிட்டதாக விமர்சித்துள்ளார்.  மேலும் படிக்க


  ”மகன் பாஜகவில் இணைந்தது கடுமையான வலியை தந்துள்ளது” - காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனி கருத்து


கேரளா காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி நேற்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். தனது மகனின் செயல் மிகுந்த வேதனையை அளித்துள்ளது என்றும், இது  தவறான முடிவு என்றும் ஏ.கே.ஆண்டனி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் படிக்க


     சூடுபிடிக்கும் கர்நாடகா தேர்தல் களம் : “இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி”


கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தல் வரும் மே மாதம் 10 தேதி நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 124 தொகுதிகளுக்கான  வேட்பாளர் பட்டியலை கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியிட்டது. இதனிடையே 42 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க


எதிர்க்கட்சியினர் அமளி.. வீணான 2வது கூட்டத்தொடர் : நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு 


நாடாளுமன்றத்தில் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆம் பாதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - ராகுல் காந்தி  மற்றும் அதானி விவகாரம் குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 16 நாட்களும் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கியது. மேலும் படிக்க