• என்ன! 41 பேரின் உயிரை காப்பாற்ற பயன்படுத்தப்பட்டது தடை செய்யப்பட்ட ‘எலி வலை சுரங்க முறையா?’


உத்தரகாசி மீட்பு பணியில் பயன்படுத்தப்பட்ட எலி வலை சுரங்க முறை, கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. உத்தரகாண்டின் சார் தாம் வழித்தடத்தில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, கடந்த 12ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்து விழுந்தது. அப்போது அங்கு பணியாற்றி வந்த 41 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க பயன்படுத்தப்பட்ட அனைத்து உயர் தொழில்நுட்பங்களும், இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் கொண்டெ மேற்கொள்ளப்பட்ட  அனைத்துமே தோல்வியையே சந்தித்தன. இறுதியில், பாதுகாப்பற்றது என 9 ஆண்டுகளுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட,  எலி வலை சுரங்க முறை தான் 41 பேரை உயிருடன் மீட்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது. மேலும் படிக்க..



  • உத்தரகாசி சுரங்க தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி உரையாடல் - சொன்னது என்ன?


உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கி 17 நாட்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட, 41 தொழிலாளர்களும் சின்னாலிசூரில்  உள்ள சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஆரம்பகட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, அவர்களை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை தொடர்புகொண்டும், 41 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டதற்காக வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் படிக்க..



  • 25,000 அடி உயரத்தில் ஜெட்டில் பறந்தாரா பிரதமர் மோடி? பொய் என அடித்து சொல்லும் சுப்பிரமணிய சுவாமி


சமீபத்தில், பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது,  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் ஏறி பயணம் செய்தார். அதோடு, விமானப்படை வீரர்களுக்கான சீருடையை அணிந்துகொண்டு நடப்பது, தேஜாஸ் விமானத்தின் அருகில் நின்று கொண்டிருப்பது, அந்த விமானத்தில் அமர்ந்தவாறு வெற்றிச் சின்னம் காட்டுவது போன்று தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பிரதமர் மோடி வெளியிட்டார். பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் தேஜஸ் விமானத்தில் பிரதமர் பயணித்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் படிக்க..



  • ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைக்குமா? டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் முடிவு என்ன?


மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. முதலில், டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இருந்தவர் மணிஷ் சிசோடியாதான்.  சிசோடியாவை தொடர்ந்து, அதே வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். மேலும் படிக்க..



  • "அம்மானு என அழைச்சு மிகுந்த மரியாதை கொடுத்து இருக்கீங்க" - தெலங்கானா மக்களிடம் சோனியா காந்தி உருக்கம்


தெலங்கானாவை கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தெலங்கானா மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். வரும் நவம்பர் 30ஆம் தேதி, அங்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற கே.சி.ஆர் முனைப்பு காட்டி வருகிறார். ஆனால், கே.சி.ஆரை தோற்கடித்து தெலங்கானாவில் முதல்முறையாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மேலும் படிக்க..