• 2000 Rupee Notes: 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு நீட்டிப்பா..? மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்..!


2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படுவது தொடர்பாக பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்க்ஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) படி, புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 84 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், கடந்த மாதம் 3ம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 2000 ரூபாய் மதிப்பு 2.51 சதவிகிதம் என்றும் தெரிவித்தார். மேலும் படிக்க



  • Maharashtra New CM: அடுத்த மாதம் முதலமைச்சராகிறாரா அஜித் பவார்..? துணை முதலமைச்சர் பட்னாவிஸ் பரபர பதில்


மகாராஷ்டிர அரசியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டு இரண்டாக உடைந்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தனர். மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், சமீபத்தில்தான் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். மேலும் படிக்க



  • Oppenheimer Nehru: ஓப்பன்ஹெய்மருக்கு குடியுரிமை வழங்கியதா இந்தியா? நேரு எழுதிய ரகசிய கடிதம்..நடந்தது என்ன?


21ஆம் நூற்றாண்டு தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் கிறிஸ்டோபர் நோலன். இவரின் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் ஓப்பன்ஹைமர். அணு ஆயுதத்தின் தந்தை என அழைக்கப்படும் அமெரிக்க விஞ்ஞானி ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு, எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. மேலும் படிக்க



  • Free Tomato: போன வருஷம் விஸ்கி, சிக்கன்.. இந்த வருஷம் தக்காளி.. இலவசமாக கொடுத்த பிஆர்எஸ் கட்சியின் மூத்த நிர்வாகி!


கடந்த சில நாட்களாக இந்தியாவில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.100ஐ கடந்து விற்பனையாவதால் தக்காளியை பதுக்குவதும், அதை திருடுவதுமான செயல்கள் அதிகரித்து வருகின்றன. பருவமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நியாயவிலை கடைகள் மூலம் தக்காளி விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் படிக்க



  • Manipur Violence: ’ஏன் ஓடி ஒளிஞ்சுக்கிறீங்க’..மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை வெளுத்து வாங்கிய காங்கிரஸ்!


மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு, இனக்கலவரம் இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்து வந்தாலும் பிரதமர் மோடி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். ஆனால், மக்கள் மத்தியில் மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோ ஏற்படுத்திய தாக்கம், அவரை வாய் திறந்து கண்டிக்க வைத்தது. மேலும் படிக்க