தமிழ்நாடு:



  • ’என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை: எடப்பாடி பழனிசாமி பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு

  • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வறுமையை ஒழித்து பெண்களை சுயமரியாதையுடன் வாழச்செய்யும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  • ஆன்லைன் மூலம் மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ்க்கு இன்று பொதுக்கலந்தாய்வு - மருத்துவ கவுன்சில் தகவல்

  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தீவிரப்படுத்த கோரி ஓபிஎஸ் ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்பு - அமமுக அறிவிப்பு 

  • சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகள் மதுபானம் பரிமாற உரிமம் அளிப்பது தொடர்பாக சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதா என தமிழக  அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

  • தேமுதிக இப்போது யாருடனும் கூட்டணி இல்லை. கூட்டணியில் இல்லாததாலேயே பாஜக கூட்டணிக்கு அழைக்கவில்லை - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்

  • ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக கொடி என்றும் பறந்து கொண்டே இருக்கும் - சிவி சண்முகம் 

  • சென்னை மெட்ரோவில் சுமார் 150 சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.


இந்தியா:



  • மணிப்பூர் விவகாரத்தில் அமைச்சர்களுக்கு பின்னால் பிரதமர் மோடி ஓடி ஒளிந்து கொள்வதாக காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

  • கர்நாடகாவை சேர்ந்த ஏழு உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • நாளை மாலை 5 மணி வரை ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் தடை

  • கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 2.09 லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபதி : ரிசர்வ் வங்கி அறிக்கையில் பகிர் தகவல்

  • பி.எஸ்.எல்.வி-சி 56 ராக்கெட் சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளாக டிஎஸ் – சாரை சுமந்துக்கொண்டு வரும் ஜூலை 30 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.


உலகம்: 



  • இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து நாளை அனைத்து கட்சி கூட்டம் - அதிபதி ரணில் விக்ரம்சிங்கே ஏற்பாடு

  • அமெரிக்காவிடம் இருந்து ரூ. 54 ஆயிரம் கோடிக்கு போர்விமானங்களை ஆஸ்திரேலியா வாங்க போவதாக தகவல்.

  • நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் வெடித்து 3 குழந்தைகள் உள்பர 20 பேர் உயிரிழப்பு.

  • ட்விட்டர் லோகோ மாற்றம் : நீல பறவைக்கு பதிலாக கறுப்பு வெள்ளை எக்ஸ் வடிவத்தில் புதிய லோகோ.

  • வங்கதேசத்தில் ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. 


விளையாட்டு: 



  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றி அசத்தியுள்ளது.

  • ஹர்திக் பாண்டியா இல்லாததால் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருப்பார் என பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

  • டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா - அஸ்வின் இருவரும் இணைந்து 500 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளனர்.

  • கிலியன் எம்பாப்பேயை தங்கள் அணிக்கு இழுக்க சவுதி அரேபியாவைச் சேர்ந்த அல்-ஹிலால் கிளப் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.