• Dengue Vaccine: டெங்கு காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி.. 2026ஆம் ஆண்டுக்குள் தடுப்பூசி.. இந்திய மருந்து நிறுவனம் அதிரடி


கொசுக்கள் வழியாக பரவும் டெங்கு காய்ச்சல், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை தந்து வருகிறது. இந்தாண்டு ஜனவரி மாதம்  முதல் ஜூலை 31ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 31,464 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த ஏழு மாத காலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 36 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதன் பரவல் குறைந்திருந்தாலும், 2020 முதல் 2021க்கு இடைப்பட்ட காலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 333 சதவிகிதம் அதிகரித்தது. மேலும் படிக்க 



  • Modi South Africa Tour: விமானத்தில் இருந்து இறங்க மறுத்த மோடி? இந்தியாவில் இருந்து சைபர் அட்டாக்..! தென்னாப்ரிக்கா விளக்கம்


தென்னாப்ரிக்கா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அமைச்சரின் வரவேற்பை ஏற்று, விமானத்தில் இருந்து இறங்க மறுத்துவிட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  தென்னாப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் கடந்த 22ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்ற, பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது, பிரேசில், சீனா, தென்னாப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் படிக்க 



  • Chandrayaan 3 Moon Video: பள்ளமும் மேடுமாய் காட்சியளிக்கும் நிலா: துல்லியமாக படம்பிடித்த விக்ரம் லேண்டர்..வீடியோ வெளியிட்ட இஸ்ரோ!


விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்ட கேமரா நிலவின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்தது. இந்த புகைப்படத்தின் வீடியோவை இஸ்ரோ தற்போது அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பின் காட்சிகள் இஸ்ரோ வெளியிட்ட வீடியோவில் இடம் பெற்றுள்ளன.  நிலவின் பள்ளம், மேடுகள் உள்ளிட்டவை புதிய வீடியோவில் துல்லியமாக இடம் பெற்றுள்ளன.சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நேற்று முன்தினம் மாலை 6.04 மணியளவில் தரையிறக்கப்பட்டது. மேலும் படிக்க 



  • BRICS New Members: பிரிக்ஸ் அமைப்பில் இணையும் மேலும் 6 நாடுகள்.. யார் யார் தெரியுமா?


பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளுக்கான பிரிக்ஸ் கூட்டமைமைப்பில் மேலும் 6 நாடுகள் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரிக்ஸ் கூட்டமைமைப்பில் மேலும் 6 நாடுகள் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோகன்ஸ்பெர்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி மற்றும் தென்னாப்ரிக்க அதிபர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். மேலும் படிக்க 



  • Cauvery Dispute: காவிரி விவகாரம்.. கர்நாடகாவின் அடுத்த மூவ்.. பிரதமர் மோடியை சந்திக்கும் அனைத்து கட்சி குழு


ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் தொடங்கி மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி வரை, 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தந்திருக்க வேண்டும்.  ஆனால், பருவமழை தாமதம் காரணமாக 3 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கியுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. மேலும் படிக்க