தமிழ்நாடு:
- அனைத்து அரசு பள்ளிகளுக்கும் காலை உணவுதிட்டம் விரிவாக்கம் - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று விரிவாக்கம்
- மலிவான அரசியலுக்காக தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக்கூடாது - தி காஷ்மீர் ஃபைல்ஸ் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்
- 69வது ஆண்டு தேசிய சினிமா விருதுகள் அறிவிப்பு - தமியில் சிறந்த படமாக கடைசி விவசாயி தேர்வு
- இரவின்நிழல் படத்தில் 'மாயவா சாயவா' பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்ற ஷ்ரேயா கோஷல் - கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா
- அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
- ஆதியோகி சிலைக்கான உரிய ஆவணங்கள் எங்கேயும், எப்போதும் சமர்பிக்க தயார் - ஆவணங்கள் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் விளக்கம்
- டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது - அண்ணாமலை ஆவேசம்
- நாங்குநேரி சம்பவத்தில் கைதான 6 மாணவர்களின் ஜாமின் மனு தள்ளுபடி
- சென்னையில் 461வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை
இந்தியா:
- சந்திரயான் 3 லேண்டரில் உள்ள கருவிகள் அனைத்தும் இயக்கம் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல்
- எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதிக்கு மதிப்பளிக்க வேண்டும் - சீன அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
- 3 நாட்கள் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாடு முடிவடைந்ததை தொடர்ந்து தென்னாப்ரிக்காவில் இருந்து கிரீஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி
- காவிரி நீர் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு மீது இன்று விசாரணை
- ரூ.7,800 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் கொள்முதல் - ராணுவ அமைச்சகம் ஒப்புதல்
- மானிய விலை யூரியாவை தவறாக பயன்படுத்தினால் சிறை தண்டனை - மத்திய அரசு எச்சரிக்கை
- குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்ட 3 மசோதாக்களை ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு கூடியது
- சந்திரயான் 3 திட்ட வெற்றி - விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடுகிறார் பிரதமர் மோடி - காங்கிரஸ் குற்றச்சாட்டு
உலகம்:
- தென்னாப்ரிக்காவில் 3 நாட்கள் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாடு நிறைவு - கூட்டமைப்பில் புதியதாக 6 நாடுகளை சேர்க்க முடிவு
- அமெரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் பலி
- புகுஷிமா அணு உலையின் கதிரியக்க கழிவு நீரை கடலில் திறந்து விட்டது ஜப்பான்
- வடகொரியா ஏவிய ராணுவ உணவு செயற்கைக்கோள் மீண்டும் தோல்வி
- தைவானுக்கு ரூ.4,100 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்க அமெரிக்கா அனுமதி
விளையாட்டு:
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 2வது இடம் - பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து
- இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து - தேர்தல் நடத்தப்படாததால் சர்வதேச மல்யுத்த சம்மேளனம் நடவடிக்கை
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - எச்.எஸ். பிரனாய் காலிறுதிக்கு முன்னேற்றம்