உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 75% பேர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள்
சமூக அளவிலும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய மக்களை முன்னேற்றும் வகையில் இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஒடுக்கப்பட்டு வரும் மக்களுக்கு, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கும் வகையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது."இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124, 217 மற்றும் 224 ஆகிய பிரிவுகளின் கீழ்தான் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். நீதிபதிகள் நியமனங்களில் ஒருவரின் சாதியின் அடிப்படையிலோ வகுப்பின் அடிப்படையிலோ இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.மேலும் வாசிக்க.
நாட்டையே உலுக்கிய மெகா கடத்தல்:
நாட்டில் இதுவரை நடைபெறாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு அதை வளைத்து பிடித்துள்ளனர்.தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த மூவர், 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை இந்தியாவுக்கு கடத்தி வந்துள்ளனர். பயணப் பையில் வைக்கப்பட்டிருந்த காலணிகளுக்குள் வெளிநாட்டு நாணயம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.மேலும் வாசிக்க.
மணிப்பூர் விவகாரத்தால் பிரதமருக்கு வந்த நெருக்கடி..
பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள இந்தியா (எதிர்க்கட்சி கூட்டணி) கூட்டணி கட்சி தலைவர்கள், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் கூடி, நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்து விவாதிக்க உள்ளனர். திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கூட்டம் முடிந்ததும், நாடாளுமன்ற அவைக்குள் நுழைவதற்கு முன்பு காந்தி சிலை அருகே எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்த உள்ளனர். மேலும் வாசிக்க..
மகாராஷ்டிராவில் தொடர் மழை
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மாநிலமே வெள்ளக்காடாய் மாறியுள்ளது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று புனேவிற்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பால்கர், ராய்காட், ரத்னகிரி, சடரா ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. மேலும் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் தொடர் மழை காரணமாக யமுனோத்ரி, பத்ரினாத் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் நெஞ்சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.மேலும் வாசிக்க.
மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 2 உயிரிழப்பு!
மத்திய பிரதேசத்தில் உள்ள சத்தர்பூர் பகுதியில் மின்னல் தாக்கி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிழந்துள்ளனர். சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கச்சார் கிராமத்தில் (கர்ரி மற்றும் கச்சார்) கிராமத்திற்கு இடையே வனத்துறையின் தோட்டத்தில் மின்கம்பி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் மேற்கொண்டபோது, மழை பெய்துள்ளது. மழை பெய்த போது, மழையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கொள்ள அருகில் உள்ள மரங்களுக்கு அடியில் நின்றிருந்தனர். மேலும் வாசிக்க.
உலகை உலுக்கி, பெரும் போரையே நிறுத்திய புகைப்படம்..!
அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு..
இந்தியாவில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இரண்டு நாட்களுக்கு முன் அரசு வெளியிட்டது. நாட்டில் அரிசியின் விலை உயர்வை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் அரிசி, பருப்பு, பால், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பருப்பு மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் பருப்பு வகைகளின் இருப்பு நிலை குறித்து மத்திய அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதுமட்டுமின்றி கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் அரிசியின் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாசிக்க..