மத்திய பிரதேசத்தில் உள்ள சத்தர்பூர் பகுதியில் மின்னல் தாக்கி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிழந்துள்ளனர்.
சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கச்சார் கிராமத்தில் (கர்ரி மற்றும் கச்சார்) கிராமத்திற்கு இடையே வனத்துறையின் தோட்டத்தில் மின்கம்பி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் மேற்கொண்டபோது, மழை பெய்துள்ளது. மழை பெய்த போது, மழையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கொள்ள அருகில் உள்ள மரங்களுக்கு அடியில் நின்றிருந்தனர். அப்போது, மின்னல் தாக்கியதில், இருவர் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தாமோ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..
கேரளாவில் 6 வயது சிறுவனை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் தான் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. அங்குள்ள அனச்சல் அருகே அமக்கண்டம் பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவருக்கு தன் பக்கத்து வீட்டில் வசித்து வந்த தன் மனைவியின் சகோதரி குடு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனிடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி, திடீரென அந்த வீட்டுக்குள் புகுந்த சுனில், அங்கு ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் மற்றும் பாட்டியின் தலையில் சுத்தியலால் அடித்துள்ளார். இதில் பாட்டி காயமடைந்த நிலையில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
மற்றொரு அறையில் சிறுவனின் அம்மாவும், சகோதரியும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அம்மாவை சுத்தியலை கொண்டு தாக்கியதில் அவர் மயக்கமான நிலையில், 14 வயது சிறுமியை அருகிலுள்ள கொட்டகைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்தது. இந்த வழக்கில் ஷாஜகான் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இடுக்கியின் வெள்ளத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் ஒன்றரை ஆண்டுக்குப் பின் குற்றப்பத்திரிக்கை சமர்பிக்கப்பட்டது. வழக்கின் விசாரணையில் மொத்தம் 73 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். கடந்த ஜூலை 20 ஆம் தேதி ஷாஜகான் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி இன்று அவருக்கான தண்டனையை அறிவித்தனர். அதன்படி சிறுவனை கொன்ற குற்றத்திற்காக குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, தாய் மற்றும் பாட்டியை தாக்கி கொலை செய்ய முயன்றது என 4 குற்றங்களுக்கும் தனித்தனியாக ஆயுள்தண்டனையையும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை நீதிபது டி.ஜி.வர்கீஸ் வழங்கினார்.
மேலும் வாசிக்க..
G-20: சென்னையில் இந்த பகுதிகளிலெல்லாம் ட்ரோன்கள் பறக்கத்தடை - என்ன காரணம் தெரியுமா?