13th Amendment: இலங்கையின் 13ஆவது சட்டத்திருத்தம் கூறுவது என்ன? தமிழர்களின் உரிமையை மீட்க உதவுமா?


இலங்கை இன பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய - இலங்கை அரசுக்கிடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இலங்கையில் உள்ள 9 மாகாண கவுன்சில்களுக்கு அதிகார பகிர்வு வழங்கும் வகையில், 13ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், சிங்கள அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக இன்று வரையில், அதை அமல்படுத்த முடியவில்லை. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/what-is-the-13th-amendment-to-the-sri-lankan-constitution-tna-and-indian-govt-stand-on-the-issue-130067/amp


Chandrayaan 3 Mission: நிலவைநோக்கி சீறிப்பாயும் சந்திரயான்-3; நான்காவது கட்டத்துக்கு உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு





நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் கடந்த 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 40 நாட்கள் பயணம் செய்து  ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக 10 கட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முக்கியமாக 10 கட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் எல்.வி.எம் 3 ராக்கெட் பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோமீட்டர் உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிலைநிறுத்தியது தான் முதற்கட்டம். அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/chandrayaan-3-mission-launch-fourth-orbit-raising-maneuver-rocket-launches-into-space-watch-video-130060/amp

 


Kerala Court: பெண்ணின் கையைப் பிடித்தால்... கேரள மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் அதிரடி கருத்து


கேரளாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஒரு பெண்ணின் கையை சாதாரணமாக பிடிப்பது அல்லது தவறான நோக்கமின்றி பெண்ணை அணுகுவது அந்த பெண்ணின் மாண்பை மீறுவதாக இருக்காது என கூறி தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354-ன் கீழ், ஒரு பெண்ணின் கைகளைப் பிடித்து, எந்த தவறான நோக்கமும் இல்லாமல் அச்சுறுத்துவது பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைக்கும் குற்றமாகாது என்று கேரள நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/a-kerala-court-has-ruled-that-holding-a-woman-s-hand-or-touching-her-without-any-ulterior-motive-does-not-violate-her-dignity-129955/amp


Ranil Wickremesinghe: 2 நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு உற்சாக வரவேற்பு; குடியரசுத் தலைவர், பிரதமருடன் சந்திப்பு




இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று இரவு அதாவது ஜூலை 20ஆம் தேதி இரவு இந்தியா வந்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர்  முரளீதரன் விமான நிலையத்தில்  இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்கவை வரவேற்றார். இலங்கை ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் கலைஞர்கள் விமான நிலையத்தில் கர்பா இசை நிகழ்ச்சி நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு அரசியல் ரீதியான பயணம்  மேற்கொண்டுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/sri-lankan-president-ranil-wickremesinghe-arrives-in-delhi-for-2-day-visit-details-here-130155/amp