இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று இரவு அதாவது ஜூலை 20ஆம் தேதி இரவு இந்தியா வந்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர்  முரளீதரன் விமான நிலையத்தில்  இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்கவை வரவேற்றார்.


இலங்கை ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் கலைஞர்கள் விமான நிலையத்தில் கர்பா இசை நிகழ்ச்சி நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு அரசியல் ரீதியான பயணம்  மேற்கொண்டுள்ளார்.


தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் அரிந்தம் பாக்சி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் வருகை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பல நீண்டகால கூட்டாண்மையை மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார். விக்கிரமசிங்க பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல்  அரசியல் பயணம் இதுவாகும்.


அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பதிவில், "ஜனாதிபதி பதவி ஏற்ற பிறகு இந்தியாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கையின் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கேவை அன்பாக வரவேற்பானது, விமான நிலையத்தில் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர்  முரளீதரனால் வழங்கப்பட்டது. இந்த பயணம் பலதரப்பு - கூட்டாண்மையை மேலும் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளார். 






ஜனாதிபதி விக்கிரமசிங்க தனது விஜயத்தின் போது, ​​இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற இந்திய உயரதிகாரிகளுடன் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பார் என்று வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.  இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை வலுப்படுத்தும் மற்றும் மேம்பட்ட இணைப்பு மற்றும் துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராயும் என கூறப்படுகிறது


வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவின் அண்டை நாடுகளின் முதல் கொள்கை மற்றும் தொலைநோக்கு திட்டங்களில் இலங்கை ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை வலுப்படுத்தும் மற்றும் மேம்பட்ட இணைப்பு மற்றும் பரஸ்பர வழிகளை ஆராயும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதற்கிடையில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவின் இந்திய பயணம் முக்கியமான ஒன்றாகும், ஏனெனில் இலங்கை,  இந்திய நாட்டுடன் முக்கியமான, பன்முக உறவுகளைக் கொண்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சக அதிகாரிகளின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.