- Diwali Bonus: 'தீபாவளி போனஸ் ரெடி' படுகுஷியில் ரயில்வே ஊழியர்கள் - மத்திய அரசு அறிவிப்பு!
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் போனஸ் பலருக்கும் உதவிகரமாக இருக்கும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள் ஆவலாக காத்திருந்தனர். மேலும் படிக்க
- DA Hike: ஒரு கோடி அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்...அகவிலைப்படி உயர்வு...மத்திய அரசு அதிரடி!
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியானது தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் கணக்கிடப்படுகிறது. மத்திய தொழிலாளர் அமைச்கத்தின் கீழ்தான் தொழிலாளர் பணியகம் செயல்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன் பெற உள்ளனர். 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- Rahul Gandhi On Adani: அதானி குழுமம் செய்த முறைகேடே மின் கட்டண உயர்வுக்கு காரணம்.. ராகுல் சொல்வது என்ன?
அதானி குழுமம் மீது நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பிரதமர் மோடி அதானி குழுமத்தை பாதுகாப்பதன் காரணமாகவே இந்த முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதானி குழுமத்தின் நிலக்கரி இறக்குமதி முறைக்கேட்டால் மக்கள் கூடுதல் மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில பத்திரிக்கையான financial times அதானி நிறுவனம் நிலகரி இறக்குமதியில் முறைகேடு செய்துள்ளது என்பது குறித்து ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
- Dutee Chand: 'எல்லாம் வீணாகிவிட்டது' : உச்சநீதிமன்ற தன்பாலின திருமண தீர்ப்பால் டூட்டி சந்த் அப்செட்
தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் முடிவு செய்யும் வரை தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று பரபரப்பான தீர்ப்பு வழங்கினர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் பிரபல தடகள வீராங்கனை டூட்டி சந்த் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மீது அதிருப்தியை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- Apna Chandrayaan: உங்கள் சந்திரயான் தளம், சிறப்புப் பாடத்திட்டங்கள் அறிமுகம்: மாணவர்கள் பங்கேற்க அழைப்பு