தமிழ்நாடு:
- இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது; மக்களிடம் எடுத்து சொல்ல நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு
- தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோய் ஆண்டுக்கு 4% அதிகரிப்பு - மருத்துவர்கள் எச்சரிக்கை
- யூனிட்டுக்கு ரூ. 8ல் இருந்து ரூ.5.50 ஆக குறைப்பு; அடுக்குமாடி குடியிருப்புக்கு மின் கட்டண சலுகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- 'காசாவில் தாக்கப்பட்ட மருத்துவமனை' போர் விதிகளுக்கு எதிரானது - உதயநிதி வேதனை
- திமுக ஒரு கட்சி அல்ல என்றும், அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசியுள்ளார்.
- சுங்கத்துறை அதிகாரிகள் 3 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாக பறிமுதல் செய்ததை திரும்ப ஒப்படைக்க கோரி மனு
- நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னையில் நேற்று காலை முதல் வேப்பேரி, பூக்கடை, வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
- அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்தியா:
- மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
- நிலக்கரி இறக்குமதியில் ரூ. 12 ஆயிரம் கோடி மோசடி; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதானி குழுமம் மீது விசாரணை - ராகுல் காந்தி பரபரப்பு அறிவிப்பு
- மேற்கு வங்க மாநிலம் கராக்பூர் ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தன்பாலின திருமண வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் தன்னுடைய திருமண திட்டம் வீணாகிவிட்டதாக தடகள வீராங்கனை டூட்டிசந்த் வேதனை
- மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- மத்தியக் கல்வி அமைச்சகம் சந்திரயான் 3 சாதனைகள் தொடர்பாக ‘உங்கள் சந்திரயான்’ என்ற இணையதளத்தையும் அதற்கான சிறப்பு பாடத் திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது.
- சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாட்டை மீண்டும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம்:
- வியட்நாமில் டெங்கு நோய் பரவல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
- நவீன பட்டுப்பாதை திட்டத்தில் ரூ. 8.32 லட்சம் கோடி முதலீடு - சீன மாநாட்டில் அதிபர் ஜின்பிங் உறுதி.
- ஜப்பானில் பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து - 18 மாணவர்கள் படுகாயம்.
- இஸ்ரேலின் சுதந்திரம் பாதுகாக்கப்பட அமெரிக்கா எப்போதும் துணையாக நிற்கும் - ஜோ பைடன்.
- வருகின்ற 27-ந்தேதி உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
விளையாட்டு:
- உலகக் கோப்பை 2023: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இன்று களமிறங்குகிறது இந்திய அணி
- உலகக் கோப்பை 2023: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்களான சுப்மன் கில் 2வது இடத்திலும், ரோஹித் சர்மா 6வது இடத்திலும், விராட் கோலி 9வது இடத்திலும் உள்ளனர்.
- எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் - நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் உற்சாகமாக பேசியுள்ளார்.