• காங்கிரஸ் அளித்த வாக்குறுதி.. ஐந்து மாநில தேர்தலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தாக்கத்தை ஏற்படுத்துமா?


அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலின் செமி பைனலாக கருதப்படும் ஐந்து மாநில தேர்தல் வரும் நவம்பர் 7ஆம் தேதி தொடங்குகிறது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. மிசோரம் மற்றும் சத்தீஸ்கரின் முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 17ஆம் தேதியும், நவம்பர் 25இல் ராஜஸ்தானிலும் நவம்பர் 30ஆம் தேதி, தெலங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் படிக்க..



  • அடுத்தக்கட்டத்திற்கு சென்ற ககன்யான் திட்டம்: இஸ்ரேல் தலைவர் சொன்ன செம நியூஸ்.. எதிர்ப்பார்ப்பில் விஞ்ஞானிகள்..


மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஜூலை 23ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. மேலும் படிக்க..



  • ஐந்து மாநில தேர்தலில் இஸ்ரேல் ஹமாஸ் போர் தாக்கத்தை ஏற்படுத்துமா? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?


உக்ரைன் போர் ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடங்கியுள்ள போர் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.  இச்சூழலில், இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் வரும் நவம்பர் 7ஆம் தேதி தொடங்குகிறது. மிசோரம் மற்றும் சத்தீஸ்கரின் முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 17ஆம் தேதியும், நவம்பர் 25இல் ராஜஸ்தானிலும் நவம்பர் 30ஆம் தேதி, தெலங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் படிக்க..



  • வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த போலீஸ் அதிகாரி.. உங்களுக்கு ஒரு சட்டமா?


மத்திய அரசு ரயில்வே துறையில் பல்வேறு நவீன வசதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியதுதான் வந்தே பாரத் ரயில் ஆகும். அதிநவீன தொழில்நுட்பம், புதிய தோற்றம், அதிவேகம் என பல சிறப்பம்சங்களை கொண்ட வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு சொகுசான பயணத்தை தருகிறது. பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த ரயிலின் கட்டணம் மற்ற ரயில்களை காட்டிலும் பன்மடங்கு அதிகம் ஆகும். மேலும் படிக்க..



  • உலக கோப்பை கிரிக்கெட் நடைபெற்ற இடத்தில் நில அதிர்வு.. ரிக்டர் அளவுகோளில் 3.1 ஆக பதிவு..


டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும், உத்தர பிரதேசத்தின் நொய்டா, குருகிராம் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகி உள்ளது. ஃபரிதாபாத் என்ற பகுதியில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது. மேலும், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க..