அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலின் செமி பைனலாக கருதப்படும் ஐந்து மாநில தேர்தல் வரும் நவம்பர் 7ஆம் தேதி தொடங்குகிறது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
ஐந்து மாநில தேர்தல்:
மிசோரம் மற்றும் சத்தீஸ்கரின் முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 17ஆம் தேதியும், நவம்பர் 25இல் ராஜஸ்தானிலும் நவம்பர் 30ஆம் தேதி, தெலங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு, பல்வேறு கேள்விகளை முன்வைத்து, ஏபிபி - சி வோட்டர் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதில், பல்வேறு விதமான அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள், அதற்கு தேர்தலில் பயன் அளிக்குமா என மக்கள் முன்பு கேள்வி முன்வைக்கப்பட்டது.
ஆட்சி அமைக்கும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வரம்பு உயர்த்தப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
தாக்கத்தை ஏற்படுத்துமா சாதிவாரி கணக்கெடுப்பு?
ராஜஸ்தானில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அதற்கு பயன் அளிக்குமா என்ற கேள்விக்கு, 40.1 சதவிகிதம் பேர், பயன் அளிக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். இதில், பாஜக ஆதரவாளர்கள் 23.7 சதவிகிதத்தினரும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் 55.5 சதவிகிதத்தினரும் அடங்குவர்.
26 சதவிகிதத்தினர், ஓரளவுக்கு பயன் தரும் என கருத்து தெரிவித்துள்ளனர். 29.2 சதவிகிதத்தினர், இந்த வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும் பயன் தராது என கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அதற்கு பயன் அளிக்குமா என்ற கேள்விக்கு, 52.4 சதவிகிதம் பேர், பயன் அளிக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். இதில், பாஜக ஆதரவாளர்கள் 32 சதவிகிதத்தினரும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் 74.9 சதவிகிதத்தினரும் அடங்குவர்.
22.1 சதவிகிதத்தினர், ஓரளவுக்கு பயன் தரும் என கருத்து தெரிவித்துள்ளனர். 19.2 சதவிகிதத்தினர், இந்த வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும் பயன் தராது என கருத்து தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அதற்கு பயன் அளிக்குமா என்ற கேள்விக்கு, 41.8 சதவிகிதம் பேர், பயன் அளிக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். இதில், பாஜக ஆதரவாளர்கள் 23.1 சதவிகிதத்தினரும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் 55.9 சதவிகிதத்தினரும் அடங்குவர்.
28.9 சதவிகிதத்தினர், ஓரளவுக்கு பயன் தரும் என கருத்து தெரிவித்துள்ளனர். 21.8 சதவிகிதத்தினர், இந்த வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும் பயன் தராது என கருத்து தெரிவித்துள்ளனர்.