டெல்லியில் நில அதிர்வு:
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், உத்தர பிரதேசத்தின் நொய்டா, குருகிராம் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகி உள்ளது. ஃபரிதாபாத் என்ற பகுதியில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது. மேலும், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக, இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டெல்லியில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே போட்டி நடைபெற்று வரும் நிலையில், நில அதிர்வு ஏற்பட்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்:
முன்னதாக, ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரின் வரமேற்கு பகுதியில் இன்று அதிகாலை 6.3 ரிக்டர் என்ற அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. ஹெராட் நகருக்கு அருகே 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. இது 6.3 கிமீ (நான்கு மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 6.3 என்ற ரிக்டர் அளவில் இந்த பாதிப்பு ஏற்பட்டாலும், இதுவரை உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.
கடந்த வாரம் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, 6.3, 5.9 மற்றும் 5.5 ரிக்டர் அளவில் மூன்று நிலநடுக்கங்களும் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தினால் ஆப்கானிஸ்தான் முழுவதும் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க
"இஸ்ரேல் வரம்பு மீறுகிறது; அனைத்து மக்களுக்கும் தண்டனை ஏன்” - காசா மக்களுக்காக கொதித்த சீனா