- நீட் தேர்வு தோல்வியால் மாணவன் தற்கொலை.. சோகத்தில் தந்தையும் தற்கொலை.. பெரும் சோகம்..!
சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தந்தையும் தற்கொலை செய்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நீட் விலக்கு மசோதா பற்றி கேள்வியெழுப்பப்பட்டதற்கு, அந்த கோப்பில் நான் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி. தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- 1,800 சிறப்பு விருந்தினர்கள்..செல்பி எடுக்க ஸ்பெஷல் ஸ்பாட்..சுதந்திர தினத்திற்காக மத்திய அரசின் மெகா பிளான்
இந்தியா சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளை நிறைவு செய்து, 77ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 1,800 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 15-20 வரை MyGov போர்ட்டலில் பாதுகாப்பு அமைச்சகத்தால் ஆன்லைன் செல்ஃபி போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- மாணவர்களே இன்றே கடைசி நாள்.. யோகா, இயற்கை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க 5.30 மணி வரை அவகாசம்
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள், கடந்த மாதம் 30ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விருப்பமுள்ள மாணவர்கள் https://tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பித்து வருகின்றனர். யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கு மாணவர்கள், இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- வெளுத்து வாங்கிய மழை.. சென்னையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்..! பயணிகள் அவதி..!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இடி, மின்னல், காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. துபாய், சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து வந்த 2 பயணிகள் விமானங்கள், துருக்கி நாட்டிலிருந்து வந்த சரக்கு விமானம் ஒன்று ஆகிய 3 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.மேலும் படிக்க
- 24 மணிநேரம்.. 18 பேர் உயிரிழப்பு.. மகாராஷ்டிரா மருத்துவமனையில் அதிர்ச்சி.. நடந்தது என்ன?
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழப்பின் காரணம் குறித்து ஆய்வு செய்ய இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் காரணமாக அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க