• மணிப்பூர் சீரியசான விஷயம்.. அதை பத்தின விவாதத்தில பிரதமர் ஜோக் அடிச்சிருக்கக் கூடாது.. ராகுல் காந்தி விளாசல்


நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார். அதில், மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி போதுமான அளவு பேசவில்லை என்றும் எதிர்க்கட்சிகளை குறிவைப்பதிலேயே அவரின் உரை அமைந்திருந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி அளித்த பதிலை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.மணிப்பூர் சீரியசான விவகாரம் என்றும் அது தொடர்பான விவாதத்தில் பிரதமர் ஜோக் அடிச்சிருக்கக் கூடாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • சட்டமாக மாறிய டெல்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதா... ஒப்புதல் அளித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு


டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அவசர சட்டத்தை தொடர்ந்து, அதை வழக்கமான சட்டமாக மாற்ற, டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை (டெல்லி சேவைகள் மசோதா) மத்திய அரசு கொண்டு வந்தது.  டெல்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் படிக்க



  • ஓய்வூதியம் பெறும் பெண்களும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - முதலமைச்சர் அறிவிப்பு


கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளை வரையறை செய்து ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் படிக்க



  • மிரட்ட நினைத்த மலேசியாவை சுருட்டி எறிந்த இந்தியா; 4வது முறையாக கோப்பையை வென்று அசத்தல்..!


2023ஆம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் மலேசிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியை 4-3 என்ற கணக்கில் இந்தியா வென்றதுடன் கோப்பையை 4வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.  இந்தியா போட்டியில் 9, 45, 45 மற்றும் 56வது நிமிடங்களில் கோல்களை அடித்தது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை என்று குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க



  •  கெஜ்ரிவாலை போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் கோரிக்கை வைக்கவில்லை? - இ.பி.எஸ் கேள்வி


சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநாடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இந்தியாவில் இருக்கின்ற எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து கூட்டத்தை கூட்டினர்.  அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சில கோரிக்கைகளை வைத்தார். அதேபோல தமிழ்நாடு முதல்வரும் கூட்டத்தில் கலந்து கொள்ள, கர்நாடகத்தில் இருந்து தண்ணீரை திறந்த விட வேண்டும் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் படிக்க