தமிழ்நாடு:



  • ஓய்வூதியம் பெறும் பெண்களும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - முதலமைச்சர் அறிவிப்பு

  • இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும் - விவசாயிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

  • நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் குடும்பத்தினருக்கு தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர்

  • நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனை நேரில் சந்தித்து சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆறுதல் - குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை என உறுதி 

  • 76 வது சுதந்திர தினவிழா- தமிழ்நாடு முழுவதும் ரயில் நிலையங்களில்  போலீசார் தீவிர கண்காணிப்பு

  • நாங்குநேரியில் மாணவர் தாக்கப்பட்டதை நேரில் பார்த்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்  நிதியுதவி அறிவிப்பு 

  • எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மதுரை மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவரின கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு 

  • சுதந்திர தின விழா எதிரொலி - சென்னை துறைமுகம் முதல் பெசன்ட் நகர் வரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு 

  • காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

  • மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் -சோதனை ராக்கெட் செப்டம்பரில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் 

  • நாங்குநேரில் பள்ளி மாணவர்கள் வெட்டப்பட்ட சம்பவம் - தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் 

  • நாங்குநேரி பள்ளி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் - அரசியல் கட்சி தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம்


இந்தியா:



  • டெல்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் 

  • மிகக்குறைவான மழையால் போதிய அளவில் தண்ணீர் இல்லை  -  காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதில்

  • ஜெயலலிதாவை அவமானப்படுத்தியதாக திமுக மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு - வாட்ஸ்-அப் வரலாறு பேசுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி 

  • பாஜக ஆட்சியில் தலித், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்கிறது என பிரதமர் மோடி பேச்சு 

  • 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

  • லட்சத்தீவில் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை அறிமுகம் - கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் கண்டனம் 


உலகம் :



  • பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு - ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்த தடை

  • சிங்கப்பூரில் போதை விருந்தில் ஈடுபட்டதாக நடத்தப்பட்ட சோதனையில் 49 பேர் கைது

  • பாகிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் பலி 

  • ஊதிய உயர்வு கோரி இங்கிலாந்தில் 20 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்

  • ஹவாய் தீவில் பயங்கர காட்டுத் தீ - உயிரிழப்பு 80 ஆக உயர்வு 

  • பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. நியமனம் 

  • பாரீஸில் உள்ள ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல் - முன்னெச்சரிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்


விளையாட்டு:



  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி 

  • ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் மலேசியா அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் கோப்பையை வென்றது

  • இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது

  • சமூக வலைத்தளங்களில் வருமானம் பற்றி உலவும் தகவல் உண்மையில்லை - விராட் கோலி விளக்கம்

  • கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்து நாட்டின் ஸ்வியாடெக் அரைஇறுதிக்கு முன்னேற்றம்