• நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் – 5 மாநில சட்டமன்றங்களின் விவரம்- யார் கைவசம் ஆட்சி, யாருக்கு சாதகம்?


அடுத்த மாதம் 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சத்தீஸ்கரில் நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 17ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மிசோரத்தில் நவம்பர் மாதம் 7ஆம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் மாதம் 17ஆம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23ஆம் தேதியும் மற்றும் தெலங்கானாவில் தெலுங்கானாவில் நவம்பர் மாதம் 30ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும் படிக்க..



  • வாரணாசியில் கோயில் வடிவில் அரசு அலுவலகங்களுக்கான இரட்டை கோபுரம் – திட்டம் தீட்டும் யோகி அரசு..


நாட்டின் மிகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக வாரணாசி உள்ளது. அங்குள்ள காசியில் உள்ள சிவாலயம் உலகப்புகழ்பெற்றது ஆகும். இந்த நிலையில், உத்தரபிரதேச அரசு வாரணாசியில் இரட்டை கோபுரம் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரட்டை கோபுரமானது கோயில்களின் வடிவில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை கோபுரமானது 10 அடுக்கு மாடிகளாக கட்டப்பட்டுள்ளது. மேலும் படிக்க..



  • ’அப்பா நல்லா இருக்காரு’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமர்த்திய சென் மகள்..


இந்தியாவை சேர்ந்த பொருளாதார வல்லுநரான அமிர்தியா சென், தனது 89வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானதாக வெளியான வதந்தியால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவர் நலமுடன் இருப்பதாக அவரது மகள் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது மகள் நந்திதா சென் தன்னுடைய எக்ஸ் தளத்தில், " நண்பர்களே, தந்தை நலமுடன் உள்ளார். நாங்கள் அவருடன் கேம்பிரிட்ஜில் அற்புதமாக நாட்களை செலவிட்டுக் கொண்டிருக்கிறோம். ஹார்வர்டில் வாரத்திற்கு 2 வகுப்புகளை அவர் கற்றுத்தருகிறார்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க..



  • டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஓசி பயணம்.. ஒரே நாளி 8.6 லட்சம் அபராதம் வசூல்.. ஷாக் கொடுத்த ரயில்வே..


மகாராஷ்ட்ராவில் அமைந்துள்ளது தானே. மும்பையை போலவே தானே நகரமும் மகாராஷ்ட்ராவின் முக்கிய நகரம் ஆகும். லட்சக்கணக்கான மக்கள் தொகை கொண்ட தானே நகரத்தில் மின்சார ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகித்து வருகிறது. தானே ரயில் நிலையத்தை மட்டும் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார ரயில் நிலையம் மட்டுமின்றி வெளியூர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களும் தானேவில் ரயில்நிலையத்தில் நின்று செல்கின்றன.  மேலும் படிக்க..


30 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு.. லாரிகள் நிறுத்தம்.. கர்நாடகாவை கண்டித்து வணிகர்கள் போராட்டம்!


Mia Khalifa: “பிசினஸ் இல்லையென்றாலும் பரவாயில்லை; ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்பேன்” - மியா கலிஃபா பதிலடி