தமிழ்நாடு:



  • புதிய கல்விக் கொள்கையில் மன அழுத்ததை குறைப்பதற்கான பல வழிவகைகள் உள்ளது - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து.

  • சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான திட்டம் அறிமுகம்; ரூ.50,000 வரை வரி பாக்கி தள்ளுபதி - முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் அறிவிப்பு

  • ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பை வழங்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை பாராட்டி  அமைச்சர் உதயநிதி நினைவுப் பரிசு வழங்கினார்.

  • திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வரும் சனிக்கிழமையன்று அலுவலகத்தில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

  •  தேவர் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசன் வங்கியில் இருந்து எடுக்க அனுமதி - நீதிமன்றம் உத்தரவு

  • முதலமைச்சர் மற்றும் அவரது மகன் உதயநிதியை பற்றி வாய் தவறி பேசிவிட்டேன் - பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு

  • முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசாவின் அசையா சொத்துக்கள் 15-ஐ முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

  • தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தோழி மகளிர் பணிபுரியும் விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

  • புதுச்சேரியில் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு வழங்கினார்.


இந்தியா:



  • மகாராஷ்ட்ராவில் தானே ரயில் நிலையத்தில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகளிடம் இருந்து ரூபாய் 8.6 லட்சம் ஒரே நாளில் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

  • இந்தியாவை சேர்ந்த நோபல் பரிசு வென்ற, பொருளாதார வல்லுநரான அமிர்தியா சென் காலமானதாக வெளியான வதந்தியால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  • வாரணாசியில் கோயில் வடிவில் அரசு அலுவலகங்களுக்கான இரட்டை கோபுரம் - யோகி ஆதித்யநாத் அரசு புதிய திட்டம்

  • இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • இந்திய ஆயுதப்படைகளுக்கு நவீன ஆயுதங்கள் வாங்க கடந்த ஓராண்டில் ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

  • பிரதமர் மோடியை கவுதம் அதானி ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்குகிறார் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 


உலகம்: 



  • ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்

  • இஸ்ரேல் போர் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு

  •  இஸ்ரேலில் அனைத்து பள்ளி கூடங்களையும் வரும் நாட்களில் மூட ராணுவம் உத்தரவு

  • மியான்மரில் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் 30 அகதிகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • காசா மீது 4வது நாளாக குண்டுவீச்சுக்கு பதிலடி; இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்- எல்லையில் ராக்கெட்களை ஏவியதால் பதற்றம்


விளையாட்டு: 



  • உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை.

  • பேட்மிண்டன் தரவரிசையில் சாத்விக்- சிராக் ஜோடி நம்ப 1 இடத்திற்கு முன்னேற்றம்.

  • இலங்கை அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

  • மற்றொரு உலகக் கோப்பை ஆட்டத்தில் வங்கதேசத்தை இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

  • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் சென்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.