• 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்.. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக..


ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக 3 மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கான பட்டியலை பாஜக இன்று அதாவது அக்டோபர் 9ஆம் தேதி வெளியிட்டது.  ராஜஸ்தானில் 41 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக  தலைமை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதேசமயம் சத்தீஸ்கரில் 64 வேட்பாளர்களும், மத்திய பிரதேசத்தில் 57 வேட்பாளர்களும் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய பிரதேசத்திற்காக ஏற்கனவே பாஜக இரண்டு பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், இது மத்திய பிரதேசத்திற்கான மூன்றாவது பட்டியல் ஆகும். மேலும் படிக்க..



  • ஹமாஸ் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த பெண் காயம்.. உறவினர்களுக்கு தூதரக அதிகாரிகள் ஆறுதல்..


இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் கேரளாவைச் சேர்ந்த ஷீஜா ஆனந்த் என்ற பெண் காயம் அடைந்துள்ளார். இருப்பினும் ஷீஜா ஆனந்துக்கு ஏற்பட்ட காயம் குறித்து உறவினர்கள் கவலைப் படவேண்டாம் என தூதரக அதிகாரிகள் ஆறுதல் தெரிவித்துள்ளனர். ஷீஜா ஆனந்த் இஸ்ரேலில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால், இஸ்ரோல் தரப்பில் இருந்தும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இதுவரை இருதரப்பிலும் சேர்த்து குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் ஆயிரத்து நூறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் படிக்க..



  • எகிறி அடித்த I.N.D.I.A கூட்டணி.. பின்னடைவை சந்தித்த பாஜக.. தேர்தலில் செம்ம டிவிஸ்ட்..


லடாக் கார்கிலில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி நடந்த தேர்தலில் 77.61 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. அதாவது, 74,026 வாக்காளர்கள் தங்களின் வாக்கினை செலுத்தி இருந்தனர். இதுகுறித்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில் லடாக் தன்னாட்சி கவுன்சில் - கார்கில் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. தேர்தல் நடத்தப்பட்ட 26 இடங்களில் 22 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி வெற்றியை பதிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டு,  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மேலும் படிக்க..



  • கர்நாடகா உட்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..


தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் தேதியை இன்று பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. அதன்படி, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நண்பகல் 12 மணிக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும். இதன்பிறகு, 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொள்ளும். மேலும் படிக்க..


Israel Hamas War: ”இங்கு போர் நடந்துகொண்டிருக்கிறது; பேச்சுவார்த்தைக்கு இடமில்லை” - இஸ்ரேல் திட்டவட்டம்..


Anna Salai Traffic Diversion: வாகன ஓட்டிகளே முக்கிய தகவல்.. அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமல்..


Cauvery: கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தையா? பிரச்சினையை முதலில் இருந்து தொடங்குவதற்கு சமம் - அமைச்சர் ரகுபதி