• அடிதடி வன்முறை.. சூறையாடப்பட்ட வாக்குச்சாவடி.. மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நாளிலும் கலவரம்


கடும் வன்முறைக்கு மத்தியில் மேற்குவங்க மாநிலத்தில் துணை ராணுவத்தின் பாதுகாப்புடன், இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 5.67 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே அங்கு பல்வேறு வன்முறை மற்றும் கலவரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.65,000 துணை ராணுவப் படையினரும்,  மாநில காவல்துறை சார்பில் 70 ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் படிக்க



  • போச்சா..! ஆதாருடன் பான் எண்ணை இணைக்கவில்லையா? ரூ.6000 செலவு செய்யணும் மக்களே..!


ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் வருமான வரி செலுத்துவோர் கூடுதலாக ரூ.6000 வரை செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்ட் உடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கான கால அவகாசம் கடந்த ஜுன் 30ம் தேதி நிறைவடைந்தது. ஏற்கனவே பலமுறை இதற்கான அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்த நிலையில், இந்த முறை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதனால், ஜுன் 30ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்ட்கள் அனைத்தும் தற்போது செயலிழக்க தொடங்கியுள்ளன. மேலும் படிக்க



  • ஒடிசா ரயில் விபத்து..ஆதாரங்களை அழிக்க முயற்சி..3 பேர் கைது..அதிரடி காட்டிய சிபிஐ


கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் உலகையே சோகத்தில் ஆழ்த்தியது. இதில், 293 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது சிபிஐ அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனிடையே மரணத்தை உண்டாக்கும் நோக்கில் செயல்பட்டதாகவும் ஆதாரங்களை அழித்த குற்றச்சாட்டிலும் அருண் குமார் மஹந்தா, முகமது அமீர் கான், பப்பு குமார் ஆகிய மூன்று ரயில்வே அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் படிக்க



  • “மணிப்பூர் கலவரத்தை அடக்க நாங்க உதவுறோம்” - இந்தியாவிற்கு ஆதரவு தரும் அமெரிக்கா..!


மணிப்பூர் கலவரத்தை அடக்க உதவ தயார் என இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார். மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். அமெரிக்கா கவலை கொள்வது ஏன் என கேள்வி கேட்பீர்கள். இது நாடுகளின் நட்புக்கான கவலை அல்ல. ஒரு மனினாக நாங்கள் கவலை கொள்கிறோம்.  மணிப்பூரில் நடைபெறும் வன்முறையில் குழந்தைகள் மற்றும் தனிநபர்கள் இறப்பதைப் பார்க்கும்போது கவலைப்படுவதற்கு நாங்கள் இந்தியராக இருக்க வேண்டியதில்லை என அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க



  • பாலியல் தொந்தரவு வழக்கு.. பாஜக எம்.பிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன.. டெல்லி நீதிமன்றம் பரபரப்பு


இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் மேற்கொண்ட போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன என டெல்லி நீதிமன்றம் தெரிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.இதை தொடர்ந்து, ஜூலை 18ஆம் தேதி, ஆஜராகும்படி பிரிஜ் பூஷனுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.மேலும் படிக்க