Morning Headlines July 07: 



  • சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும் தேதியில் மாற்றம்


பூமியின் துணைக்கோளான நிலவை ஆராய்ச்சி செய்வதற்கு அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற முன்னணி நாடுகள் ஈடுபாடு காட்டி வருகின்றன. இந்தியாவும் நிலவை ஆராய்ச்சி செய்வதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 13ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த நிலையில், ஒருநாள் தாமதமாக வரும் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாசிக்க..



  • ராகுல் காந்தி அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு..!


ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடகாவில் நடந்த கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீது குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ.வான பூர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த மார்ச் 23 ஆம் தேதி ராகுலுக்கு  2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் வாசிக்க..



  • வணக்கம் லடாக் நிகழ்ச்சி


”வணக்கம் லடாக்” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  இன்று (ஜூலை 7ஆம் தேதி )கடற்படை அணிக்கும் லடாக் அணிக்கும் இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெறுகிறது. “லடாக் இளைஞர்களின் மாபெரும் பங்களிப்பை விரிவுபடுத்துதல் தொலைதூரப் பகுதிகளை மேம்படுத்துவதற்கான தேசியத் தலைமையின் பார்வையைத் தொடர்ந்து, லடாக் யூனியன் பிரதேசத்துடனான இணைப்பை வலுப்படுத்த பல வகையான மக்கள்தொடர்பு நிகழ்வை  இந்தியக் கப்பற்படை  தொடங்கியுள்ளது. மேலும் வாசிக்க..



  • அஜித் பவாருக்கு சரத் பவார் மாஸ் பதில்


தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் பவார், கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் ஆகியோருக்கிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்த அஜித் பவார், துணை முதலமைச்சராக பதவியேற்றார்.கூட்டணி கட்சிகளை பாஜக அழித்துவிடும் என சரத் பவார் விமர்சித்திருந்த நிலையில், கட்சியின் பெரும்பாலானோரின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் வயதை கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து சரத் பவார் விலக வேண்டும் என அஜித் பவார் சாடியிருந்தார்.மேலும் வாசிக்க..



  • உச்சநீதிமன்றத்திற்கு மேலும் இரண்டு நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை


உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பே உயர் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளை நியமனம் செய்து வருகிறது. கொலிஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே சுமூகமான சூழல் நிலவவில்லை.மேலும் வாசிக்க..



  • மேகதாது அணை கட்டுவது இதற்காகத்தான்


மேகதாது அணை(Mekedatu Dam) திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்ற கர்நாடகா அமைச்சரின் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. “மேகதாது திட்டம் கடலில் கலக்கும் உபரி நீரை அடிப்படையாகக் கொண்டது. எனவே, வீணாகும் தண்ணீர் பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களுக்குப் பயன்படுத்தப்படும். நாங்கள் யாருக்கும் தங்கள் பங்கை மறுக்க முயற்சிக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.மேலும் வாசிக்க..



  • தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல்


மத்திய அமைச்சரவை புதன்கிழமை டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவுக்கு (டிபிடிபி) ஒப்புதல் அளித்துள்ளது, இது நிறுவனங்களின் தரவு மீறல்களை தானாக முன்வந்து ஒப்புக்கொள்வதற்கு வழி வகுக்கும், அதே நேரத்தில் 'alternate dispute resolution mechanism (மாற்று தகராறு தீர்க்கும் பொறிமுறையை)'யும் வழங்குகிறது என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் வாசிக்க..