தமிழ்நாடு:



  • செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு: 3வது நீதிபதி வழக்கு விசாரணை

  • அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி வழங்க மறுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

  • வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

  • தமிழகத்தில் நடைபெறுவது போல 'இந்தியாவுக்கும் ஒரு திராவிட மாடல் ஆட்சி தேவை' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • கூட்டுறவு துறையின் 64 வகை பொருட்கள் - "ஒரே கிளிக் வீடு தேடி டோர் டெலிவரி"- கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

  • அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 

  • லஞ்ச வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிப்பதை ஏற்க முடியாது-மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

  • மகளிருக்கான உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

  • தேனி தொகுதி அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


இந்தியா: 



  • பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் நாளை என 2 நாள் பயணமாக 4 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

  • ஹரியானாவில் திருமணம் ஆகாதவர்கள் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.2,750 ஓய்வூதியம் வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

  • ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

  • வணக்கம் லடாக் நிகழ்ச்சி: இன்று கடற்படை அணிக்கும் லடாக் அணிக்கும் இடையே கால்பந்து போட்டி: வெளியான அறிவிப்பு

  • பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். வெங்கடநாராயணா பத்தி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அமைப்பு பரிந்துரை

  • சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் 16ஆம் தேதி முதல் தினசரி விமான சேவை தொடங்க உள்ளது.


உலகம்:



  • புகுஷிமா அணு உலையின் கழிவுநீரை பசிபிக் கடலில் திறந்து விடும் திட்டம் - சீனா கடும் எதிர்ப்பு

  • ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் குழு-7 ஆகஸ்ட் மாதம் விண்வெளிக்கு பறக்கிறது.

  • துபாயின் மக்கள்தொகை கடந்த 6 மாதங்களில் 50,000-க்கும் மேல் உயர்ந்துள்ளதாக புள்ளியியல் மையம் தெரிவித்துள்ளது.

  • கனடா எப்பொழுதும் வன்முறை மற்றும் வன்முறை அச்சுறுத்தல்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 

  • அமெரிக்காவில் சுதந்திர தின விடுமுறையின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.


விளையாட்டு:



  • வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

  • மீராபாய் சானு தற்போது 95 சதவீத உடல் தகுதியுடன் உள்ளார் - இந்திய பளுதூக்குதல் சம்மேளன தலைவர் தகவல்

  • ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு வருகிற 20-ந் தேதி நடைபெறும் என தகவல்


  • டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர்: முதலாவது தகுதி சுற்றில் கோவை-திண்டுக்கல் இன்று பலப்பரீட்சை