பூமியின் துணைக்கோளான நிலவை ஆராய்ச்சி செய்வதற்கு அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற முன்னணி நாடுகள் ஈடுபாடு காட்டி வருகின்றன. இந்தியாவும் நிலவை ஆராய்ச்சி செய்வதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 13ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும் தேதியில் மாற்றம்:
இந்த நிலையில், ஒருநாள் தாமதமாக வரும் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான்-3, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு, சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், அதன் நோக்கத்தை நிறைவு செய்யாமல் திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. சந்திரயான்-2 விண்கலத்தில், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், அதற்குள் பிரக்யான் எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை அனுப்பப்பட்டன.
நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட முதல் லேண்டரான விக்ரம், திட்டமிட்டபடி தரையிறங்கினாலும் நிலவின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 2.1 கி.மீ. உயரத்தில் லேண்டர் வரும் போது திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது. 'சாப்ட் லேண்டிங்' எனப்படும் மெதுவாகத் தரையிறங்குவதற்குப் பதில், வேகமாக தரையிறங்கி (ஹார்ட் லேண்டிங்) விழுந்தது. இதன் காரணமாக, ரோவரை திட்டமிட்டபடி தரையிறக்க முடியவில்லை.
இச்சூழலில், சந்திரயான்-3 குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், "சந்திரனைப் பற்றிய நமது புரிதலை சந்திரயான்-3 மேலும் ஆழப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முக்கிய நோக்கம் சந்திரனின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறங்கி, ரோபோ ரோவரை இயக்குவதாகும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஹெவி-லிஃப்ட் ஏவுகணையைப் பயன்படுத்தி சந்திரயான்-3 ஏவப்பட உள்ளது" என்றார்.
சந்திரயான் 3 பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்: