Morning Headlines July 5:
- மோடி குடும்ப பெயர் வழக்கு
பிரதமர் மோடியின் குடும்பப்பெயர் வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அடுத்த விசாரணை ஆகஸ்ட் 16ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணை முடியும் வரை ராகுல் காந்திக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தல் போன்ற எந்த நடவடிக்கைகளையும் எடுக்க நீதிமன்றம் இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும் வாசிக்க..
- Uniform Civil Code: பொதுசிவில் சட்டம் வேண்டுமா, வேண்டாமா?
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியாமா, இல்லையா என்பது குறித்து ஜுலை 14ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று 22வது சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளின் விரிவான எண்ணங்கள் தொடர்பாக அறிய இந்திய சட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது. விருப்பமுள்ள நபர்கள் வரும் ஜுலை 14ம் தேதி வரையில் membersecretary-lci@gov.in எனும் முகவரிக்கு மெயில் மூலமாக தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். அதுமட்டுமல்லாமல், 'உறுப்பினர் செயலர், இந்திய சட்ட ஆணையம், 4-வது தளம், லோக் நாயக் பவன், கான் மார்க்கெட், புதுடெல்லி-110 003' என்ற முகவரிக்கும் தபால் மூலம் கருத்துகளை அனுப்பிவைக்கலாம்.ஏற்கெனவே கருத்துக் கேட்பு நடந்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் புதிதாக கருத்துகள் கேட்கப்படுகின்றன. ஏனெனில் பொது சிவில் சட்டம் தொடர்பாக இந்த 3 ஆண்டுகள் இடைவெளியில் பல்வேறு நீதிமன்றங்களில் பல வழக்குகள் விசாரித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதனால் புதிதாக கருத்து கேட்கப்படுவது அவசியமாகிறது” சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க..
- 4 மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம்
தெலங்கானா மாநில பாஜக தலைவராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநில பாஜக தலைவராக முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டி நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர பாஜக தலைவராக புரந்தேஸ்வரியும், பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜாஹரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் கிஷன் ரெட்டி பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் மத்திய அமைச்சரவையில் மாற்றம் வருவது கிட்டதட்ட ஊர்ஜிதமாகியுள்ளது. மேலும் வாசிக்க..
- இந்தி தேசிய மொழியா? அனைத்து அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக் குழுக்களைக் கலையுங்கள்- ராமதாஸ் வலியுறுத்தல்
இந்தி தேசிய மொழி அல்ல என்றும் அனைத்து அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக் குழுக்களை கலைக்க வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:’’டெல்லியில் நடைபெற்ற மத்திய நலவாழ்வு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா, ‘’ மாநில மொழிகளை நாம் பேசினாலும், தேசிய மொழி என்ற அடிப்படையில் இந்திக்கு மரியாதை அளிக்க வேண்டும். இந்தி மொழிதான் நமது தேசியத் தன்மையை உருவப்படுத்துகிறது. தேசிய ஒற்றைத் தன்மைக்கும், ஒற்றுமைக்கும் இந்தி மொழிதான் பாலமாக செயல்படுகிறது என்பதால் அனைவரும் இந்தியில் பேச வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க..
- ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் - 4 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி
உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் வரும் 7,8 ம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி சுமார் 50 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுக்கிறார்.பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு மாநில சுற்றுப்பயணம் விவரம் குறித்து பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரதமர் மோடி இரண்டு நாட்களில் நான்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான 50 திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி வெள்ளிழமை (07.07.2023) டெல்லியிலிருந்து ராஜஸ்தானின் ராய்பூர் செல்கிறார். அங்கு ராய்பூர் - விசாகப்பட்டினம் வழித்தடத்தில் ஆறுவழி சாலை உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதை தொடந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்.மேலும் வாசிக்க..