தமிழ்நாடு:



  • சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் - வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் முடிந்து நேற்று வீடு திரும்பினார்.

  • 'மக்களை தேடி மேயர்' திட்டம்: மேயர் பிரியா அடையாறில் இன்று மக்களை சந்திக்கிறார்

  • அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு - சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

  • சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விக்கான விண்ணப்பதிவு இன்று தொடக்கம்

  • கோவை, நீலகிரி, தென்காசிக்கு அலர்ட்; தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  • அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு : 3வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை 

  • மேல்பாதி திரெளபதி கோயில் விவகாரம்: 7ஆம் தேதி இரண்டாம் கட்ட விசாரணை

  • கரூரில் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட பரிசோதனை - ஆட்சியர் தொடங்கி வைப்பு

  • ஜூன், ஜூலை மாதத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும்- காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம்

  • வேங்கை வயல் விவகாரம்: மறுப்பு தெரிவித்த 8 பேருக்கு டி.என்.ஏ சோதனை கட்டாயம் - புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு

  • இந்தி தேசிய மொழி அல்ல என்றும் அனைத்து அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக் குழுக்களை கலைக்க வேண்டும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்


இந்தியா: 



  • 4 மாநிலங்களில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

  • மணிப்பூரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறப்பு

  • 2024 நாடாளுமன்ற தேர்தல்; பல மாநிலங்களில் புதிதாக பா.ஜ.க. தலைவர்கள் நியமனம்

  • கேரளாவில் தொடர் கனமழை: 6 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

  • பிரதமர் மோடியின் குடும்பப்பெயர் வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது - ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் 

  • தெலங்கானா, ஆந்திர பிரதேஷ், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களுக்கு பாஜக தலைவர்களை நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

  • பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியாமா, இல்லையா என்பது குறித்து ஜுலை 14ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.


உலகம்:



  • ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்கள் செயல்படுவதை தடுக்கும் விதமாக பெண்கள் அங்கு வேலை செய்ய கூடாது என்றும், பெண்கள் சேவைக்காக அங்கு செல்லக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

  • சான் பிரான்ஸிஸ்கோவில் இந்திய துணை தூதரகத்துக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைப்பு - அமெரிக்கா கடும் கண்டனம்

  • 10 ஆண்டுகளுக்கு பின்னர் தூதர்களை மீண்டும் நியமித்த துருக்கி-எகிப்து

  • ஆப்கானிஸ்தானில் உணவு நெருக்கடி: 10 ஆயிரம் டன் கோதுமை வழங்கி இந்தியா உதவி

  • பாகிஸ்தானில் ஊழல் தடுப்பு சட்டத்தில் நீதிமன்ற காவல் 30 நாட்களாக நீட்டிப்பு; அவசர சட்டத்துக்கு துணை அதிபர் ஒப்புதல்


விளையாட்டு: 



  • நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மாருக்கு 3.3 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்த பிரேசில் அரசு

  • பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: இலங்கை வீராங்கனை சமாரி அட்டப்பட்டு முதலிடம் பிடித்து சாதனை

  • ஜெர்மனி, ஸ்பெயின் தொடருக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: 9-வது முறையாக பட்டம் வென்றது இந்தியா

  • இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம் செய்து பிசிசிஐ உத்தரவு

  • டிஎன்பிஎல்: திருப்பூர் அணியை வீழ்த்தி மதுரை அணி பிளே ஆஃப்க்கு முன்னேற்றம்