பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அவ்வப்போது அரங்கேறி வருவது நாட்டு மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்களிடமும் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. காவல்துறை தரப்பில் பல கடும் தண்டனைகளை விதித்து வந்தாலும், பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் பாலியல் தொல்லை அளித்து வருகின்றனர்.
கைக்குழந்தையின் தாய்:
இந்த நிலையில், ஹைதரபாத்தில் அரங்கேறிய சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உஸ்மானியா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது டர்னாகா. இந்த பகுதியில் 25 வயது பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கடந்த 27-ந் தேதி அந்த பெண் தனது கைக்குழந்தைக்கு பால் வாங்க வேண்டும் என்பதற்காக சென்றுள்ளார். அப்போது, அவர் பால் வாங்கிய பிறகு வீட்டிற்கு செல்ல தாமதம் ஆகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரிடம் தன்னை செல்லும் வழியில் இறக்கிவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த பெண்ணை ஏற்றிக்கொண்ட அந்த இளைஞர் பாதி தூரம் சென்ற பிறகு, அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனாலும், பாலியல் சீண்டலில் அந்த இளைஞர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் இரு சக்கர வாகனத்தில் இருந்தே அந்த பெண் கீழே குதித்துள்ளார்.
லாரியில் மோதி விபத்து:
அப்போது, அவர் எதிரே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பெண் சட்டென்று கீழே குதித்ததால் லாரி அந்த பெண் மீது மோதியது. இதில், அந்த பெண்ணுக்கு பலத்த அடிபட்டது. பின்னர், அந்த பெண் சம்பவ இடத்திலேயே மயங்கியதால், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை அருகில் இருந்த காவல் நிலையத்தில் அனுமதித்தனர். காவல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 27-ம் தேதி அரங்கேறிய இந்த சம்பவம் இன்றுதான் வெளியில் தெரியவந்துள்ளது. பெண்ணுக்கு பாலியல் சீண்டல் அளித்த நபர் பெண்ணின் செல்போனையும் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார். அந்த பெண் கீழே குதித்து, லாரியில் அடிபட்டவுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடினார். தற்போது போலீசார் லாரி ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓடும் இரு சக்கர வாகனத்தில் பாலியல் தொல்லையை சந்தித்த பெண், தப்பிக்க முயற்சித்தபோது லாரியில் அடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: இந்தி தேசிய மொழியா? அனைத்து அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக் குழுக்களைக் கலையுங்கள்- ராமதாஸ் வலியுறுத்தல்
மேலும் படிக்க: Odisha Train Accident Reason: 291 பேர் பலியான ஒடிசா ரயில் விபத்து - காரணத்தை கண்டுபிடித்த ரயில்வே பாதுகாப்பு ஆணையம்