உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் வரும் 7,8 ம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி சுமார் 50 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுக்கிறார். 

பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு மாநில சுற்றுப்பயணம் விவரம் குறித்து பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரதமர் மோடி இரண்டு நாட்களில் நான்கு மாநிலங்களில் சுற்றுப்ப்யணம் மேற்கொண்டு ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான 50 திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 

பிரதமர் மோடி வெள்ளிழமை (07.07.2023) டெல்லியிலிருந்து ராஜஸ்தானின் ராய்பூர் செல்கிறார். அங்கு ராய்பூர் - விசாகப்பட்டினம் வழித்தடத்துல் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதை தொடந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அதொடு, நிறைவுபெற்ற திட்டங்களை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

இதையெடுத்து, ராஜஸ்தானிலிருந்து உத்திரபிரதேசம் செல்கிறார். கோரஹ்பூரில் கீதா பிரெஸின் நூற்றாண்டு விழா  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். பின்னர், மூன்று வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில்களின் சேவையை தொடங்கி வைக்கிறார். கோரஹ்பூர் இரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.இதையெடுத்து, பிரதமர் மோடி தனது தொகுதியான வாரணாசி செல்கிறார். அங்கு அவர் பல முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பு (e Pandit Deen Dayal Upadhyay Junction) முதல் சோன் நகர் வரையிலான புதிய பிரத்யேக சரக்கு வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.  வாரணாசி-ஜான்பூர் (NH56) 4 வழிச் சாலை விரிவாக்கத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.மணிகர்ணிகா காட் (Manikarnika Ghat) மற்றும் ஹரிச்சந்திரா காட் (Harishchandra Ghat) ஆகியவற்றை புதுப்பிக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

வாரணாசியில் இருந்து தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகருக்கு 8-ம் தேதி புறப்பட்டு செல்கிறார் அங்கு நாக்பூர்-விஜயவாடா வழித்தடத்தின் முக்கிய பகுதிகள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். கரீம்நகர்-வாரங்கல் பிரிவின் 4 வழிச்சாலைக்கும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளார். வாரங்கலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி வாரங்கலில் இருந்து ராஜஸ்தானின் பிகானேர் நகருக்கு செல்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அமிர்தசரஸ் ஜாம்நகர் விரைவுச்சாலையின் பல்வேறு பிரிவுகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிகானேர் ரெயில் நிலையத்தை மறுசீரமைப்பு திட்டத்தினையும் தொடங்கி வைக்கிறார்.  இதன் பின்னர் பிகானேரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். உத்தரபிரதேசம் தவிர மற்ற 3 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.