Morning Headlines July 2:
- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நாடாளுமன்ற கூட்டத்திற்கான தேதிகளை இறுதி செய்தது.தேசிய நிதித் தகவல் பதிவேடு, டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா, திவால் திருத்தச் சட்டம் உள்ளிட்டவை வரும் நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடர்பான சில பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. நிலுவையில் உள்ள பணிகள் இன்னும் சில நாட்களில் முடிந்தால், பிரதமர் நரேந்திர மோடியால் மே 28ஆம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் வாசிக்க..
- மணிப்பூரில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..
மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக இனக்கலவரமும் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதுவும் பயன் தந்ததாக தெரியவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது. மாநில காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பப்பட்டது. ஆனால், வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட குகி சமூகத்திற்கு ஆதரவாக ராணுவம் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், இணைய சேவை முடக்கத்தை ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டித்து மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல, பள்ளிகள் திறப்பையும் ஒத்திவைத்துள்ளது. ஜூலை 8-ஆம் தேதி வரை, பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.மேலும் வாசிக்க..
- பிரதமர் மோடியின் டிகிரி சான்றிதழ் விவகார வழக்கு
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் குஜராத் நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது. பிரதமர் மோடியின் கல்லூரி பட்டம் பற்றிய விவரங்களை வெளியிட தேவையில்லை என கூறிய நீதிமன்றம், வழக்கு தொடர்ந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி பிரேன் வைஷ்ணவ், குஜராத் பல்கலைக்கழகம், மத்திய அரசு, தலைமை தகவல் ஆணையர் மற்றும் முன்னாள் தலைமை தகவல் ஆணையர் எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது.மேலும் வாசிக்க..
- மகாராஷ்ட்ரா விபத்து
மகாராஷ்ட்ராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 26 பயணிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் யவத்மாலில் இருந்து புனே நோக்கி பேருந்து ஒன்று 32 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சம்ருத்தி மகாமார்க் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் இதுவரை 25 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 பேர் பலத்த தீக்காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் வாசிக்க..
- 9 மாதங்களுக்கு முன்னரே தேர்தலுக்கு தயாரான பாஜக!
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக, தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள பாஜக, எந்த மாநிலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து வியூகம் அமைத்து வருகிறது.மேலும் வாசிக்க..