தமிழ்நாடு:



  • அரசு பணியில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை - அரசாணை வெளியீடு

  • அரசு, சுயநிதி கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான கட்டணம் அதிகரிப்பு : 10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்து அரசு உத்தரவு

  • பக்தர்களின் நலன் கருதி திருவண்ணாமலை கோயிலில் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

  • அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக ஆட்சியில் நிறுத்தியது தான் திமுகவின் இரண்டு ஆண்டு கால சாதனைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

  • வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம்; டி.என்.ஏ பரிசோதனை செய்ய 8 பேர் மறுப்பு

  • முதலமைச்சருக்கு யார் யாரெல்லாம் தொந்தரவு அளித்தாலும் அனைத்தையும் தூக்கி எரிந்து விட்டு மக்களுக்கான ஆட்சியை செய்து வருகிறார் - அமைச்சர் பொன்முடி

  • காவிரியில் எந்த பாதிப்பும் ஏற்படுவதற்கும் தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது - எம்பி ரவிக்குமார்

  • மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 : திட்ட சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் நியமனம்


இந்தியா: 



  • மத்திய அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்ற தாமதம் செய்த காரணத்திற்காக ட்விட்டர் நிறுவனத்திற்கு மேலும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

  • கடந்த ஜூன் மாதம், சரக்கு மற்றும் சேவை வரியாக 1 லட்சத்து 61 ஆயிரம் கோடியே 497 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

  • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • ஆதார் அட்டையுடன் பான் கார்ட் இணைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.

  • மகாராஷ்டிராவில் கோர விபத்து : பஸ் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 25 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

  • மத்திய அரசின் உத்தரவுப்படி கடைகள், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. 

  • ஜூலை 20ல் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூட்டுறவு சங்க மசோதா நிறைவேற்றப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு


உலகம்: 



  • இந்தியா- இலங்கை படகு போக்குவரத்து மேலும் தாமதமாகும் என இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தகவல்.

  • பாகிஸ்தானில் பேருந்து - கார் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலி.

  • 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட இயக்குனருக்கு இங்கிலாந்து மன்னர் சார்லஸ் விருது


விளையாட்டு: 



  • ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறும் வாய்ப்பினை இழந்துள்ளது.

  • ஐசிசியின் உலகக்கோப்பை தொடருக்காக இந்தியாவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய, பாகிஸ்தான் சிறப்பு குழுவை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

  • சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில், 2வது முறையாக தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

  • இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இஹோர் ஸ்டிமாக்கிற்கு 2 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.