Breaking LIVE: உள்ளாட்சி அமைப்புகளில் பதவியேற்ற 50 விழுக்காட்டினர் பெண்கள் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

ABP NADU Last Updated: 08 Mar 2022 07:18 PM
குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வீடு - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுக் கழக குடியிருப்புகள் குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

பல திட்டங்களை கொண்டு வந்தது திராவிட முன்னேற்ற கழகம்

பெண்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை கொண்டு வந்தது திராவிட முன்னேற்ற கழகம் - முதல்வர் ஸ்டாலின்

உள்ளாட்சி அமைப்புகளில் பதவியேற்ற 50 விழுக்காட்டினர் பெண்கள் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

 உள்ளாட்சி அமைப்புகளில் பதவியேற்ற 50 விழுக்காட்டினர் பெண்கள் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மார்ச் 18-ஆம் தேதி தாக்கலாகிறது தமிழ்நாடு பட்ஜெட்

மார்ச் 18-ஆம் தேதி தாக்கலாகிறது தமிழ்நாடு பட்ஜெட்

மனிதாபிமான பாதை வழியாக இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறவேண்டும் - இந்திய தூதரகம்

மனிதாபிமான பாதை வழியாக இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறவேண்டும் - இந்திய தூதரகம்

இந்தியர்கள் இருக்கும் இடத்தில் தாக்குதல்

தாக்குதல் நடந்துள்ள சுமி நகரத்தில் இந்திய மாணவர்கள் அதிகமானோர் தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது - இந்தியர்களின் நிலை குறித்து மத்திய அரசு கவலை

உக்ரைனின் சுமி நகரத்தின் மீது தாக்குதல்

உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஷ்யப்படைகள் வெடிகுண்டு வீசித் தாக்குதல் -  9 பேர் உயிரிழப்பு

”ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான்...” - அப்போலோ மருத்துவர் பதில்

2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதாவுக்கு மாரடைப்புதான் ஏற்பட்டது - ஆறுமுகசாமி ஆணையத்தின் குறுக்கு விசாரணையில் அப்போலோ மருத்துவர் பதில்

யூட்யூப் தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

யூட்யூபை தவறாக பயனப்டுத்துவதை தடுப்பதற்கு வழிமுறைகள் தேவை. யூட்யூபில் நல்ல விஷயங்கள் இருந்தாலும் நிறையப்பேர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். 

”உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்” - கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசு தரப்பு வழக்கிறிஞர்

கோகுல்ராஜ் கொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டுள்ளதாக அரசு தரப்பு வழங்கறிஞர் பா.பா மோகன் தெரிவித்துள்ளார். 

கோகுல்ராஜ் கொலை வழக்கு - இன்று மதியம் தண்டனை விவரம் வெளியாக உள்ளது

கோகுல்ராஜ் கொலைவழக்கில் 5 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், 10 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் இன்று மதியம் வெளியாக உள்ளது. மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் வெளியிட இருக்கிறார்.

அண்ணா பல்கலை பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது - அமைச்சர் பொன்முடி

25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைகழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் மறுப்பு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

நகைக்கடன் தள்ளுபடியை தணிக்கை செய்ய அதிகாரிகள் நியமனம்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடிக்கு அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை தணிக்கை செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

நெல்லிக்குப்பம் நகரமன்ற துணைத் தலைவர் ராஜினாமா

நெல்லிக்குப்பம் நகரமன்ற துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகினார் திமுகவின் ஜெயப்பிரபா.

தங்கம் விலை குறைவு

சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமிற்கு 51 ரூபாய் குறைந்து 5.020 ரூபாய்க்கும் , சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து 40,160 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று 4,362 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 3,993 ஆக குறைந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் துணை ராணுவத்தில் சேர்ந்த தமிழக இளைஞர்

கோவையைச் சேர்ந்த சாய் நிகேஷ், கடந்த 4 ஆண்டுகளாக உக்ரைனில் விமான பொறியியல் படித்து வந்தார். இந்நிலையில், உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில், அந்நாட்டு துணை இராணுவத்தில் சாய் நிகேஷ் இணைந்துள்ளார். இது குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை மேற்கொள்ள உள்ளன. 

திருப்பூர் அருகே நடந்த விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 2 பைக்குகள் மீது ஆட்டோ மோதியதில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்

தாக்குதலை நிறுத்தக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனு

ரஷ்யாவின் தாக்குதலை உடனடியாக நிறுத்த கோரி சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் நாடு மனு அளித்திருக்கிறது. இதன் விசாரணை தொடங்கியுள்ளது.

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்பு

உக்ரைனில் இருந்து ஒரே நாளில் 7 விமானங்கள் மூலம் 1314 இந்தியர்கள் மீட்கப்பட்டும் நாடு திரும்பியுள்ளனர்

ரஷ்யா - உக்ரைன் இடையே மீண்டும் பேச்சு வார்த்தை

ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேறமும் இல்லாததால், இரு நாடுகளும் மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபட முடிவு

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.

விமான விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி விமான விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார். விமானியின் சாதுர்யத்தால்தான் உயிர் பிழைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று காலை தண்டனை விவரம் அறிவிப்பு

கோகுல்ராஜ் கொலைவழக்கில் 5 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், 10 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் வெளியாக உள்ளது. மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் வெளியிட இருக்கிறார். 

அவ்வையார் சிலைக்கு மரியாதை

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்த உள்ளனர். 

Background

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்  7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 10,14,20, 23, 27 ஆகிய தேதிகளிலும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.


இந்நிலையில் இந்தத் தேர்தல் தொடர்பாக ஏபிபி மற்றும் சி-வோட்டர் ஆகியவை இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை செய்துள்ளது. அந்தக் கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.