Breaking News LIVE: புதுச்சேரியில் வழிபாட்டு தலங்கள் நள்ளிரவு 2 மணி வரை திறக்க அனுமதி

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

கீர்த்தனா Last Updated: 30 Dec 2022 10:03 PM
வானத்தில் தோன்றியது வால் நட்சத்திரம்

உளுந்தூர் பேட்டையில் வானத்தில் திடீரென தோன்றிய ஒளி, வால் நட்சத்திரமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மக்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்தும், தங்களது செல்போன்களில் படம் பிடித்தும் வருகின்றனர். 

திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா

திருவாள்ளூர் மாவட்ட திருத்தணிக் கோவிலில் திருப்படி திருவிழா மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு முழுவதும் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக நள்ளிரவில் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கபப்டும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

Pudukkottai Issue: குடிநீரில் மலம் கலந்தவர்களை கண்டறிய 11 பேர் கொண்ட குழு - திருச்சி டி.ஐ.ஜி உத்தரவு

Pudukkottai Issue: புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளைக் கண்டறிய ஏ.டி.எஸ்.பி. ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார். 

புதுச்சேரியில் வழிபாட்டு தலங்கள் நள்ளிரவு 2 மணி வரை திறக்க அனுமதி

புதுச்சேரியில் வழிபாட்டுத் தலங்கள் நள்ளிரவு 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் வழிபாட்டு தலங்கள் நள்ளிரவு 2 மணி வரை திறக்க அனுமதி

புதுச்சேரியில் வழிபாட்டுத் தலங்கள் நள்ளிரவு 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

27 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்..!

மழையால் அதிகம் பாதித்த மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 43.92 கோடி நிவாரணம் உள்பட, 27 மாவட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 51 கோடி நிவாரணம் அளிக்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

3042 சவரன் நகைகள் மோசடி - கும்பகோணம் பெண் மீது புகார்

கும்பகோணத்தைச் சேர்ந்த பாத்திமாநாச்சியா என்ற பெண் 3042 சவரன் நகைகளை சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர்களிடம் பெற்று மோசடி செய்ததாக காவல்நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை..!

4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்னும் சற்று நேரத்தில் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். 

பா.ம.க. இல்லாவிட்டால் சமச்சீர் கிடைத்திருக்காது - அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இல்லையெனில் சமச்சீர் கல்வி கிடைத்திருக்காது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE: ராமேஸ்வரம் பாம்பன் பாலம் - இரயில் போக்குவரத்து ரத்து!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் ஜனவரி 10ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத ராகுல் காந்தி...டெல்லி காவல்துறை குற்றச்சாட்டு..!

இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்த நிலையில், பாதுகாப்பு விதிகளை ராகுல் காந்தி பின்பற்றவில்லை என டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

Breaking News LIVE: ரிஷப் பண்ட் உடல்நிலை சீராக உள்ளது

கார் விபத்தில் பலத்த காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் உடல்நிலை சீராக உள்ளது, பண்ட் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE: அதிமுக இரட்டைத் தலைமைக்கு தேர்தல் அதிகாரி கடிதம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு ஓ. பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு மாநிலத் தேர்தல் அதிகாரி கடிதம்.


ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு வருமாறு பன்னீர்செல்வம், பழனிசாமி சத்யப்பிரதா சாகு அழைப்பு


 

Breaking News LIVE: திருத்தணி முருகன் கோயில் செய்தியாளர்கள் போராட்டம்

திருத்தணி முருகன் கோயில் வளாகத்தில் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோயில் நிகழ்வுகளை செய்தி சேகரிக்க அனுமதிக்காத கோயில் துணை ஆணையர் விஜயாவைக் கண்டித்து போராட்டம்.

பிரதமர் மோடியின் தாயார் இறப்புக்கு உலக தலைவர்கள் இரங்கல்...!

பிரதமர் மோடியின் தாயார் இறப்புக்கு ஜப்பான் பிரதமர், நேபாள பிரதமர் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Breaking News LIVE: திமுக முன்னாள் எம்பி மஸ்தான் மரணம்: 5 பேரிடம் விசாரணை

திமுக முன்னாள் எம்பி மஸ்தான் மரண வழக்கில் திடீர் திருப்பமாக 5 பேரிடம் கூடுவாஞ்சேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking News LIVE: மெரினாவில் மணற்சிற்பம் திறந்து வைப்பு

சென்னை மெரினா கடற்கரையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து வடிவமைக்கப்பட்ட மணற் சிற்பத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Breaking News LIVE: வழிகாட்டி மென்பொருள் தளத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

தொழில் முனைவோருக்கான வழிகாட்டி மென்பொருள் தளத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை குறித்த கையேட்டினையும் வெளியிட்டார்.


 

Breaking News LIVE: ‘கரும்பு தடிமனுக்கு 6 அடிக்கு இருக்க வேண்டும்’

“பொங்கல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கரும்பு 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் கரும்பு மெலிதாக இல்லாமல் சராசரி அளவைவிட தடிமனாக இருக்க வேண்டும்.
முழு கரும்பின் அதிகபட்ச விலை 33 ரூபாயாக இருக்க வேண்டும்” என கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.


 

Breaking News LIVE: பொங்கல் பரிசு தொகுப்புக்கு ஆட்சியர்களே பொறுப்பு - தமிழ்நாடு அரசு அறிக்கை..!

பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இந்து பெண் கொடூர கொலை...!

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தை சேர்ந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, சிறுபான்மையினரை பாதுகாக்கக் கோரி பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Breaking News LIVE: குஜராத் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமர் தாயார் ஹீராபென்னின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குஜராத் செல்கிறார்.

Breaking News LIVE: விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்... கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம்

உத்தரகாண்ட், ரூர்க்கியில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டுக்கு படுகாயம். 


கார் தீப்பிடித்து எரிந்ததில் ரிஷப் பண்ட்-க்கு தலை, காலில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Breaking News LIVE: தாயாரின் உடலை சுமந்து சென்று இறுதி அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

குஜராத், காந்தி நகரில் உள்ள தாயார் ஹீராபென்னின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, அவரது உடலை சுமந்து சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Breaking News LIVE: 4ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர் போராட்டம்

சென்னை, நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் போராட்டம் தொடர்கிறது.

Breaking LIVE: பொங்கல் வேட்டி - சேலை வழங்குவது குறித்து அமைச்சர் காந்தி விளக்கம்

1.79 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே பொங்கலுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்படும் என்றும், இதற்காக 487.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காந்தி விளக்கமளித்துள்ளார்.


பொங்கலுக்கு வேட்டி - சேலை வழங்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்ற பழனிசாமியின் அறிவிப்புக்கு அமைச்சர் காந்தி விளக்கமளித்துள்ளார்.

Breaking News LIVE: அகமதாபாத் சென்றடைந்தார் பிரதமர் மோடி

தாய் ஹீராபென்னுக்கு அஞ்சலி செலுத்த அகமதாபாத் சென்றடைந்தார் பிரதமர் மோடி.

Breaking LIVE: பிரதமரின் தாய் மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

”உங்கள் அன்புக்குரிய தாய் ஹீராபாவுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம். தாயை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது.  உங்கள் இழப்புக்காக நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE: 3 முறை உலகக்கோப்பையை முத்தமிட்ட சிறந்த கால்பந்து பீலே காலமானார்..!

கால்பந்து வரலாற்றில் எல்லா காலத்திலும் சிறந்த வீரராகவும், மூன்று முறை ஃபிபா உலகக் கோப்பை வென்ற ஒரே வீரராகவும் அறியப்படும் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தன் 82 ஆவது வயதில் காலமானார்.

Breaking News LIVE: தாய் ஹீராபென் மறைவு குறித்து பிரதமர் மோடி உருக்கமான பதிவு!

தன் தாய் ஹீராபென்னை இழந்துள்ள பிரதமர் மோடி உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


“ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு வாழ்ந்து கடவுளின் காலடியை அடைந்துள்ளார். ஒரு துறவியின் பயணம், தன்னலமற்ற கர்ம யோகியின் அடையாளம் மற்றும் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு இந்த மும்மூர்த்திகளை என் தாயிடம் நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Breaking News LIVE: பிரதமர் மோடியிம் தாய் ஹீராபென் காலமானார்!

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உயிரிழந்தார். அவருக்கு வயது 100. அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா மருத்துவமனையில் முன்னதாக ஹீரோபென் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

Background

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 


இன்றைய விலை


இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 223ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.


அதன்படி இன்று (டிச.30) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை முன்னதாகக் கடந்துள்ளது.  


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.




 


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.