தெலுங்கானா மாநிலம், சித்திபேட்டை மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிந்து வருபவர் வெங்கட் ராம் ரெட்டி. ஐஏஎஸ் அதிகாரியான இவர்தனது ஆட்சியர் பதவியை திடீரென ராஜினாமா செய்வதாக தெரிவித்து அதற்கான கடிதத்தை மாநில தலைமைச் செயலாளர் சோமேஷ் குமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து இவரின் ராஜினாமா கடிதமும் நேற்று ஏற்று கொள்ளப்பட்டது.
ராஜினாமா செய்தது தொடர்பாக வெங்கட்ராம ரெட்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தெலுங்கானாவில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் அரசு மக்களுக்கு நற்பணியாற்றி வருகிறது. தெலுங்கானாவில் உள்ள ஆட்சியை நாடு முழுவதும் தற்போது உற்று நோக்கும் அளவுக்கு சந்திரசேகர ராவ் மக்களுக்காக பணியாற்றி வருகிறார். முதலமைச்சரை போல நானும் இந்த வளர்ச்சிப்பணியில் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
மேலும் படிக்க : 12 வயதில் 70 உலக சாதனைகள்...! யோகாவில் அசத்தும் நெல்லை சிறுமி பிரிஷா...!
இனி வரப்போகும் 100 ஆண்டுகள் மக்கள் தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் ஆட்சியை பற்றி பேசுவார்கள் என்றார். மேலும், முதல்வரிடமிருந்து அழைப்பு வந்ததும் நான் டிஆர்எஸ் கட்சியில் இணைந்து மக்கள் பணி ஆற்றுவேன் என்றும், அதுவரை அவரது அழைப்பிற்காக காத்திருப்பேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க : Watch Video: மதுபானத்தை மடக்கு மடக்கு என குடிக்கும் சிறுவர்கள்... தெலுங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் அதிர்ச்சி!
சமீபத்தில் சித்திபேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவுக்கு வந்திருந்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் காலில் மாவட்ட ஆட்சியர் வெங்கட்ராம ரெட்டி விழுந்து வணங்கியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
வெங்கட்ராம ரெட்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிக்கு பிறகு இந்த விமர்சனங்கள் தற்போது உண்மை தான் என்று தெலுங்கானா எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்து வறுகின்றனர். மேலும், விரைவில் நடைபெற இருக்கும் எம்.எல்.சி. தேர்தலில் வெங்கட்ராம ரெட்டி ஆளும் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
Petrol Diesel Price: எந்த முட்டாள் உயர்த்தியது... பெட்ரோல் வரி குறித்து கொதித்த தெலுங்கானா முதல்வர்!
Modi on Ramappa Temple: இந்தியாவின் 39-வது உலக பாரம்பரிய இடமாக தெலுங்கானா ராமப்பா கோயில் தேர்வு..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்