ஆந்திரப் பிரதேச மாாநிலத்தில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தனி மாநிலமாக  தெலுங்கானா இயங்கிவருகிறது.  இம்மாநிலத்தின் சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று சந்திரசேகர ராவ் முதலமைச்சர் பொறுப்பெற்றுக்கொண்டார்.  அவரது அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் தான் எடேலா ராஜேந்தர். சுமுகமாக அமைச்சரவை சென்றுக்கொண்டிருந்த நிலையில் தான், முதல்வருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தனது உஸ்ராபாத் சட்டமன்றத்தொகுதியின் எம்.எல்.ஏ பதவியிலிலுருந்து ராஜினாமா செய்தார்.


இதனால் காலியான தொகுதியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்டதையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை மறுதினம் அதாவது அக்டேபார் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அத்தொகுதியில் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி உள்பட அனைத்துக் கட்சியினர் அத்தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்று தீவிரம் காட்டிவருகின்றனர். இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துவருகிறது. குறிப்பாக ஆளுங்கட்சி சார்பில் ஸ்ரீனிவாசயாதவ் போட்டியிடவுள்ள நிலையில், தீவிர பரப்புரை நடைபெற்றுவருகிறது.





குறிப்பாக எந்த தேர்தல் என்றாலும் ஆளுங்கட்சியினரின் பரப்புரை என்றால் சொல்லவே முடியாத அளவிற்கு விதிமுறை மீறல்கள் எல்லாம் நடைபெறும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான்  உஸ்ராபாத் தொகுதியில் அரங்கேறியுள்ளது. இந்தத் தேர்தல் பரப்புரையின் போது, சிறுவர்களும் பங்கேற்றனர். இவர்கள் ஏதோ குளிர்பானம் அருந்துவது போல அசால்டாக கையில் வைத்திருந்த மதுவை மாறி மாறி சிறுவர்கள் குடித்துக்கொண்டிருந்தனர்.


 






இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருவதோடு பல்வேறு கண்டனங்களையும் பதிவிட்டுவருகின்றனர். மேலும் இப்படி சிறு வயதிலேயே அரசியல் ஈடுபாடு மட்டுமில்லாமல் போதைக்கு அடிமையானால் இவர்களின் எதிர்காலம் என்ன ஆகும் ? என சமூக ஆர்வலர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.  இதோடு தேர்தல் விதிமுறைகளை மீறி சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைக்கப்படுகிறது.