Tamil News Today : கடந்த 24 மணி நேர நிலவரப்படி, 1,658 பேருக்கு கொரோனா தொற்று- 29 பேர் உயிரிழப்பு

Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

ABP NADU Last Updated: 15 Sep 2021 07:32 PM
கடந்த 24 மணி நேர நிலவரப்படி, 1,658 பேருக்கு கொரோனா தொற்று- 29 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,591இல் இருந்து 1,658 ஆக அதிகரித்துள்ளது.இதன்மூலம் தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் 1600ஐக் கடந்துள்ளது. சென்னையில் மேலும் 226 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 29 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,246 ஆக உயர்ந்துள்ளது.


 

எய்ம்ஸ்க்கு கட்டடமே இல்லாமல் எப்படி மாணவர் சேர்க்கை? - பிடிஆர் 

மதுரை எய்ம்ஸ்க்கு ஒரு கல் கூட வைக்காமல் நிலத்தை தோண்டாமல், நிதியும் ஒதுக்கீடு செய்யாமல் மாணவர் சேர்க்கை எப்படி நடத்துவது?. மருத்துவக் கல்வி என்பது கடினமானது; ஆய்வகம் கூட இல்லாமல் கல்லூரியை எப்படி நடத்த முடியும்?  என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு தோல்வி பயம் - வேலூர் மாணவி தற்கொலை

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு என்ற கிராமத்தில் செளந்தர்யா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி - விஜயகாந்த் அறிவிப்பு

1 முதல் 8 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு - 30ம் தேதி முடிவு

1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு தொடர்பாக வரும் 30ம் தேதி  முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

1 முதல் 8 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு - 30ம் தேதி முடிவு

1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு தொடர்பாக வரும் 30ம் தேதி  முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

உள்ளாட்சி தேர்தல் - கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: திமுக

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும் என திமுக தெரிவித்துள்ளது. கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் - திமுக.

அண்ணாவின் 113வது பிறந்தநாள் - முதல்வர் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.

பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது - விளையாட்டு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு இன்று கலந்தாய்வு

பி.இ. கலந்தாய்வு ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் சிறப்பு பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது. அரசுப்பள்ளி மாணவர், மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர், ராணுவ வீரரின் வாரிசுக்கு செப்டம்பர் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

திமுக முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது.

திமுக முப்பெரும் விழா சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. மாவட்டங்களில் காணொலி வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று

 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. 22ஆம் தேதி முடிவடைகிறது.

அதே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ரூபாய் 98.96க்கு விற்கப்பட்டது. மேலும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 93.26க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் எந்த மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. 

அதே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ரூபாய் 98.96க்கு விற்கப்பட்டது. மேலும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 93.26க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் எந்த மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. 

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பா.ம.க.!

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பா.ம.க: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என அறிவிப்பு!

Background

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பா.ம.க: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என அறிவிப்பு. 


சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி, தேர்தல் தோல்விக்குப் பின் தன்னிச்சையாக செயல்பட்டு வந்தது. கூட்டணி ஒருபுறம் தொடர்ந்தாலும், செயல்பாடுகள் தனித்து இருந்தது. இதற்கிடையில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என சமீபத்தில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.