இன்றைய தினத்தின் காலையில் அறிய வேண்டிய 10 முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.


1. மத்திய அரசிடம் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை டாடா சன்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் துணை நிறுவனமான தலாஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அதிகபட்சமாக கேட்கப்பட்ட ஏலத்துக்கு விற்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.  ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை வாங்க கேட்கப்பட்ட ஏலத்தொகை ரூ.18,000 கோடி. இந்த பரிவர்த்தனையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் அடங்கவில்லை. இதற்கான மதிப்பு ரூ.14,718 கோடி மத்திய அரசின்  ஏர் இந்தியாவின் சொத்து நிறுவனத்துக்கு (AIAHL) மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  


2. ஒரே நாடு, ஒரே மின் தொகுப்பு, ஒரே அலைவரிசை, ஒரே விலை’ என்ற திட்டத்தின் மின் நுகர்வோர் கட்டணம் 5 சதவீதம் வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


3. பேச்சுரிமையை பாதுகாப்பதில் வழங்கிய பங்களிப்புக்காக, பத்திரிகை உலகைச் சேர்ந்த டிமிட்ரி அந்த்ரேயவிச் முராட்டோவ், மரியா ஏஞ்ஜெலிட்டா ரெஸ்ஸா ஆகிய இருவருக்கு இவ்வாண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


4. தொடர்ந்து எட்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல் 4 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி வைத்துள்ளது. ரிசர்வ் ரெப்போ விகிதமும் எந்த மாற்றமும் இல்லாமல் 3.35 சதவீதம் எனும் அளவில் உள்ளது. 2021-22 நிதி ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.5 சதவீதம் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு தெரிவித்துள்ளது. 


5. மும்பையில் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்றபோது கைது செய்யப்பட்ட நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஞாயிறு அன்று மும்பையில் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற போதை விருந்தில் பங்கேற்றபோது போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.


6. கடந்த 24 மணி நேரத்தில் 21,257 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 24,963 பேர் குணமடைந்துள்ளனர்.  நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,40,221 ஆக குறைந்துள்ளது. 


7. இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் மூன்றாண்டு பதவிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து, அவர் அப்பதவியில் இருந்து விலகியுள்ளார். பணி நீட்டிப்பை விரும்பாத அவர் இப்பதிவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்




8. உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் எனுமிடத்தில் கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சம்மன் அனுப்பப்பட்ட அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் நேற்று ஆஜராகவில்லை. லக்கிம்பூர் வன்முறை வழக்கில் உத்தர பிரதேச அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் படி இல்லையென்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மோசமான படுகொலை சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கைது செய்யபடாததை நீதிமன்றம் விமர்சித்தது. 


9. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. அபு தாபில் தொடங்கிய ஆட்டத்தில், ஹைதராபாத்  அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றிக் கொண்டது. துபாயில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், பெங்களுர் அணி, டெல்லி அணியை  தோற்கடித்தது. 


10. திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் நேற்று சென்னையில் காலமானார். மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களுடனும் பணிபுரிந்த பாடலாசிரியர் என்ற அரிய பெருமையை பெற்ற விரல் விட்டு எண்ணக்கூடிய பாடலாசிரியர்களில் பிறைசூடனும் ஒருவர்


11.தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அந்த தேர்தல் நடைபெற உள்ளது. 


மேலும்,வாசிக்க: 


SRH vs MI Score LIVE : 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை   


Piraisoodan Lyricist: ’வளர்ந்த பிறை அஸ்தமனமானது’ காலமெல்லாம் நிலைத்து நிற்கும் பாடல்களை எழுதிய பிறைசூடன் காலமானார்..!